துபாயில் வாழ்ந்து வரும் இந்தியப் பெண்ணான ஸ்வப்னா ஆபிரஹாம் ஆயிரம் நாட்களில் ஆயிரம் சொந்தப் பாடல்களைப் பாடி உலக சாதனை படைத்துள்ளார்.
ஆயிரம் பாடல்களையும் தானே எழுதி, இசையமைத்து, பாடி, பதிவு செய்து இந்தச் சாதனையைப் படைத்துள்ளார் ஸ்வப்னா. 48 வயதான இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி தனது முதல் பாடலை பதிவு செய்தார். தனது ஆயிரமாவது பாடலை ஜனவரி 2,2020 அன்று பாடி நிறைவு செய்தார்.
நான்கு விருதுகள் உடனான கோல்டன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஸ்வப்னாவை கவுரவித்துள்ளது. டிஜிட்டல் ஆல்பம் முறையில் அதிகப் பாடல்களைப் பாடிய சாதனைக்காக கின்னஸ் சாதனைப் புத்தக்த்துக்கும் விண்ணப்பித்துள்ளார். தனியார் நிர்வாக ஆலோசனை மையம் ஒன்றில் பணியாற்றி வரும் ஸ்வப்னா தனது இசைப் பயணத்தின் பத்தாம் ஆண்டு நினைவைக் கொண்டாடவே ஆயிரம் நாட்களில் ஆயிரம் சொந்தப் பாடல்கள் என்ற சாதனைப் பயணத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
இதுவரையில் இவரது இசையில் 22 ஆல்பங்கள் வெளிவந்துள்ளன. ஆயிரம் பாடல்களுக்கும் கரு யோசித்து வரிகள் யோசித்து இசையமைத்து அதனை அழகாகப் பாடிப் பதிவு செய்துள்ள ஸ்வப்னாவுக்கு சர்வதேச அளவில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
மேலும் பார்க்க: காதலைச் சொல்ல 6 மாத உழைப்பில் ஒரு திரைப்படத்தையே உருவாக்கிய காதலன்!- வீடியோ
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.