ரயிலில் இருக்கைக்காகப் பலவிதமான போராட்டங்கள் நடப்பது உண்டு, அது தினமும் உள்ளூர் மின்சார ரயிலில் செல்கிறவர்களுக்கு நன்றாக தெரியும். அந்த வகையில் ரயிலில் பயணி ஒருவர் வினோத முயற்சியை நாடியுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் பரவும் அந்த வீடியோவில் ரயிலில் கூட்டம் இருப்பது தெரிகிறது. மேலும் ரயிலில் தரையில் பெண்கள் உட்படப் பலர் படுத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் ஒரு பயணி ஸ்பைடர் மேன் போல் மேல் கம்பியைப் பிடித்து இருக்கைக்கு இருக்கை தாவிச் செல்கிறார்.
கால் தரையில் படாமல் காற்றிலேயே கம்பியைப் பிடித்து சென்று காலியாக உள்ள இருக்கையைச் சென்று அடைக்கிறார். வெள்ளை சட்டை போட்ட அந்த பயணியின் செயலைப் பதிவிட்ட நபர், அவரை இந்திய ஸ்பைடர் மேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
स्पाइडरमैन भारत में। pic.twitter.com/5QNjJ8OzfP
— Professor ngl राजा बाबू 🥳🌈 (@GaurangBhardwa1) October 13, 2022
தற்போது அவர் குதித்துத் தாவிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல தரப்பட்ட கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
அதில் ஒருவர், ரயிலில் பயணம் செய்யும் ஒரு சாதாரண நபர் இருக்கையைத் தேடும் செயல் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஒருவர் அந்த சம்பவத்திற்கு நல்ல பெயர்க் கொடுக்க வேண்டும் என்று புதிய பெயராக ’ஸ்பைடர் மேன் ரயில் வே ஹோம்’என்று பெயர் சூட்டியுள்ளார்.
இதற்கு ஒருவர் சிந்திக்கும் வகையில், காமெடியாக இருந்தாலும் வருத்தமாக உள்ளது என்றும் ரயிலில் இந்த நிலைமை எப்போது மாறும்? எப்படி நாடு முன்னேறும் என்றும் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Electric Train, Viral Video