நம் சுதந்திர இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட ஒரு தனியார் ரயில்வே கம்பெனி இன்றும் அந்த கம்பெனி பெயரிலேயே செயல்பாட்டில் இருக்கிறது. அந்த கம்பெனிக்கு இந்திய அரசு ஆண்டுதோறும் பணம் கொடுத்து வருகிறது.
உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளில் இந்தியாவும் ஒன்று. அதோடு உலகின் மிக நீண்ட செயல்பாட்டில் இருக்கும் ரயில் பாதைகளைக் கொண்ட நாடுகளில் இந்தியாவிற்கு முக்கியமான இடம் உண்டு. ரயில் சேவை இந்தியாவில் தொடங்கி 150 ஆண்டுகளைக் கடந்து உலகத்தர நவீன வசதிகளுடன் இந்திய ரயில்வே இயங்கிக் கொண்டு இருக்கிறது. ஆனால் இந்தியாவில் ஆங்கில ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட ஒரு தனியார் ரயில்வே கம்பெனி இன்றும் செயல்பாட்டில் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா, ஆம் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் ஒரு ரயில் தடம் இன்றும் ஒரு தனியார் கம்பெனிக்கு சொந்தமாக இருக்கிறது. அந்த கம்பெனிக்கு இந்திய அரசு ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய் வழங்கி வருகிறது.
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி நடைபெற்றபோது, மஹாராஷ்ட்ரா மாநிலம் யாவத்மால் மற்றும் முர்ஜிதாபூர் இடையே சுமார் 190 கிலோமீட்டர் நீளமுள்ள ரயில்வே ரயில்வே பாதையை சகுந்தலா ரயில்வே என்ற தனியார் நிறுவனம் கட்டமைத்து அதில் ரயில்களை இயக்கின. இந்தியா முழுவதும் உள்ள ரயில்வே பாதைகள் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1952ஆம் ஆண்டுமுற்றிலும் அரசுடைமையாக்கப்பட்டன. ஆனால் மேலே சொன்ன அந்த ரயில் பாதை மட்டும் கண்டுகொள்ளப்படவில்லை. அந்த ரயில்பாதை இன்று வரை மீட்டர் கேஜ் ரயில் பாதையாகவே இருக்கிறது. அந்த மீட்டர் கேஜ் ரயில் பாதையில் இன்றும் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் ரயில் சேவை இயக்கப்படுகிறது.
அமராவதி மாவட்டம் யாவத்மால் அச்சல்பூர் இடையே இந்த ரயில் சேவை இயக்கப்படுகிறது. 190 கிலோமீட்டர் தூரமுள்ள இந்த தூரத்தைக் கடக்க 20 மணி நேரம் ஆகிறது. இதற்கு கட்டணமாக 150 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதற்காக சகுந்தலா ரயில்வே கம்பெனிக்கு இந்திய அரசு ஆண்டக்கு ஒரு கோடி ரூபாய் வழங்குகிறது. இந்த ரயில் பயணத்தை அங்குள்ள மக்கள் ஒரு ஹெரிடேஜ் பயணமாகவே கருதுகிறார்கள்.
இங்கிலாந்தின் மன்செஸ்டரில் கட்டப்பட்ட நீராவி எஞ்சினை பயன்படுத்தி சகுந்தலா ரயில் நிறுவனம் 1923 ஆம் ஆண்டு முதல் 70 ஆண்டுகள் 1994 ஆம் ஆண்டு வரை ரயில் சேவை வழங்கி வந்தது. பிறகு இந்திய ரயில்வே அந்த பாதையில் டீசல் எஞ்சினை தற்போது இயக்கி வருகிறது. இந்திய ரயில்வே வந்தே பாரத் ரயில் வரை எத்தனையோ நவீனத்துவம் அடைந்துவிட்டாலும், இது போன்ற பாரம்பரியமிக்க, வரலாற்று நினைவை போற்றும் சில ரயில் பாதைகளை உயிர்ப்புடன் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian Railways, Travel