Home /News /trend /

ஆதரவற்றவர்களுக்கு இலவச உணவு, சமூக சேவை - யுகேவில் கௌரவிக்கப்பட்ட இந்தியர்கள்!

ஆதரவற்றவர்களுக்கு இலவச உணவு, சமூக சேவை - யுகேவில் கௌரவிக்கப்பட்ட இந்தியர்கள்!

யுகேவில் கௌரவிக்கப்பட்ட இந்தியர்

யுகேவில் கௌரவிக்கப்பட்ட இந்தியர்

யுகே ஹானர்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்றொரு இந்தியர், தேவிந்தர் சிங் தில்லான். இவர் முதல் உலகப் போரில் வீரமரணமடைந்த இந்திய போர் வீரர்களுக்கு நடத்தப்படும் ஒரு நினைவுக்குழுவின் தலைவராக செயல்படுகிறார்.

2022ம் ஆண்டுக்கான நியூ இயர் ஹானர்ஸ் எனப்படும். நாட்டின் மரியாதைக்குரிய நபர்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் யுகே அரசாங்கம் வெளியிடும். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலரும் தாங்கள் செய்த சேவை மற்றும் தொண்டுக்காக சமீபத்தில் யுகே அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட்டு உள்ளனர். 2022ம் ஆண்டு புத்தாண்டு விருதுகள் பட்டியலில் பின்வருபர்களின் பெயர்கள் உள்ளன.

இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான அம்ரித்பால் சிங் மன் லண்டனில் ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார். சீக்கிய சமூகத்தினருக்கு இவர் செய்த சேவைக்காக அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட்டார். அம்ரித்பால் சிங் லண்டனிள் உள்ள கோவேன்ட் கார்டனில் ஒரு பஞ்சாபி உணவகத்தை நடத்தி வருகிறார். யூகேவில் இருக்கும் மிகவும் பழமையான வட இந்திய உணவகங்களில் இதுவும் ஒன்றாகும்.

ANI வெளியிட்ட செய்தியின்படி, கோவிட் 19 பாதிப்பு பரவத் தொடங்கி, தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து, இவர் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களை வழங்கியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டது. இவருடைய இந்த சேவையைப் பாராட்டும் வகையில் யுகே அரசாங்கம் இவருக்கு OBE அல்லது ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் பேரரசின் அதிகாரியாக கௌரவித்துள்ளது.

இந்த செய்தி வெளிவந்த நொடியிலிருந்து ட்விட்டரில் இவருக்கு வாழ்த்து செய்திகள் குவிந்து வருகின்றன. ‘அம்ரித்பால் சிங் மன், OBE, நம்பவே முடியவில்லை!’ என்று அவர் ட்வீட் செய்திருந்தார். ‘உங்களுடைய எல்லா செய்திகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி. எனக்கு முன்னர் இந்தச் சேவையை செய்த பலரையும் பார்த்து தான் எனக்கும் ஊரடங்கு காலத்தில் உணவு வழங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மற்றவர்களுடன் இணைந்துதான் நானும் என்னால் என்ன முடியுமோ அந்த உதவியை செய்தேன்’ என்று மிகவும் தன்னடக்கத்துடன் டிவீட் செய்திருந்தார்.



யுகே ஹானர்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்றொரு இந்தியர், தேவிந்தர் சிங் தில்லான். இவர் முதல் உலகப் போரில் வீரமரணமடைந்த இந்திய போர் வீரர்களுக்கு நடத்தப்படும் ஒரு நினைவுக்குழுவின் தலைவராக செயல்படுகிறார். இந்திய வீரர்களின் பங்களிப்பை நினைவுகூர்ந்த சேவைகளுக்காக இவருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Also read... தனது செல்லப் பிராணியான பூனையை விமானத்தில் கொண்டு சென்ற பாசக்கார மனிதர்!

Also read... 84-வது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய ரத்தன் டாடா - நெட்டிசன்கள் புகழாரம்!

மூன்றாவதாக, யுகே 2022 ஹானர்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர் ஜக்தார் சிங் கில். வார்க்ஷையரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்தார் சிங் கில்லுக்கு, பிரிட்டிஷ் சீக்கியர் மற்றும் அனைத்து சமூகத்தினரும் இவர் செய்த சேவை மற்றும் தொண்டுகளுக்காக விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அடுத்ததாக, இந்தியாவைச் சேர்ந்த கல்வியாளரான அஜய் குமார் கக்கருக்கு ‘நைட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர்’ என்ற விருது வழங்கப்பட்டது. PTI வழங்கிய செய்தியின் படி, இவர் சுகாதாரம் மற்றும் உடல்நல மேம்பாடு ஆகியவற்றில் இவருடைய பங்களிப்புக்காக இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Trending, UK

அடுத்த செய்தி