ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

Diana Award: ஏழை மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள உதவிய இந்திய வம்சாவளி சிறுவனுக்கு டயானா விருது!

Diana Award: ஏழை மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள உதவிய இந்திய வம்சாவளி சிறுவனுக்கு டயானா விருது!

இஷான் கபூர்

இஷான் கபூர்

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பள்ளி மற்றும் கல்வித் துறையை முற்றிலும் முடக்கியது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

கொரோனா ஊரடங்கின் போது சமூக சேவையில் ஈடுபட்ட இங்கிலாந்தை சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுவனுக்கு மதிப்புமிக்க டயானா விருது கிடைத்துள்ளது. வெலிங்டன் கல்லூரியில் படித்து வரும் 15 வயதான இஷான் கபூர், ஒரு நேர்மறையான மாற்றத்தை உருவாக்கித் அதனை தக்க வைத்து கொண்டதற்காக அந்த இளைஞர் மிக உயர்ந்த பாராட்டுக்கு அங்கீகாரம் பெற்றார். இந்தியாவில் டெல்லியைச் சேர்ந்த சிறுவன் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமத்துடன் பணிபுரிந்து வருகிறார். அதில் அவர் ஒதுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த சிறுமிகளுக்கான பள்ளி சீருடையை விநியோகிக்க உள்ளூர் பள்ளிக்கு உதவி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பள்ளி மற்றும் கல்வித் துறையை முற்றிலும் முடக்கியது. கல்வி பயிலும் முறை ஒரு முன்னுதாரண மாற்றத்தை பெற்றது. நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களை பயில ஆரம்பித்தனர். இருப்பினும், இந்தியாவில் பல்வேறு கிராமங்களில் டிஜிட்டல் சேவைக்கான அணுகல் மற்றும் வசதி இல்லாததால் மாணவர்கள் பெரும் கஷ்டத்திற்கு ஆளாகியிருந்தனர். இந்தியாவில் நிலவி வரும் இந்த டிஜிட்டல் பிளவு ஆயிரக்கணக்கான மாணவர்களை பள்ளி படிப்பை விட்டு வெளியேறும் கட்டாயத்திற்கு தள்ளியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த மோசமான நெருக்கடியில் மாணவர்களுக்கு உதவும் நோக்கில், இஷான் ஒரு ஆன்லைன் பிரச்சாரத்தை நடத்தி சுமார் 5000 யூரோக்களை (அதாவது இந்திய மதிப்பில் ரூ. 51,57,499) நன்கொடையாக பெற்றார். வெற்றிகரமாக திரட்டிய பணத்தில், கிட்டத்தட்ட 100 மடிக்கணினிகளை சேகரித்தார். அதேசமயம், நாடு தழுவிய பூட்டுதலின் போது டெல்லி பகுதியில் உள்ள அனைத்து ஏழை எளிய மாணவர்களுக்கும் பள்ளிப்படிப்பை மேற்கொள்வதற்கான ஆன்லைன் தொடர்பு வசதி இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

அந்த சிறுவனின் உயரிய செயலுக்காக மதிப்புமிக்க விருதினை வழங்கி இங்கிலாந்து அரசாங்கம் அவரை கவிரவித்துள்ளது. இது தொடர்பாக அரசின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " வேல்ஸின் இளவரசி டயானாவின் நினைவாக, டயானா விருதினை 9 முதல் 25 வயதுடைய ஒரு இளைஞன், தனது சமூக நடவடிக்கை அல்லது மனிதாபிமானப் பணிகளுக்காக பெறக்கூடிய மிகவும் மதிப்புமிக்க பாராட்டு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல சில நாட்களுக்கு முன்பு, மும்பையைச் சேர்ந்த ஒரு நபர் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு ஆன்லைன் வகுப்புகளை தொடர ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்து உதவிய சம்பவம் மக்களின் பாராட்டை பெற்று தந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு பிறகு துளசி குமாரி என்ற சிறுமி சாலையோரத்தில் மாம்பழங்களை விற்பனை செய்து வந்தார். அங்கு வந்த ஒரு நபர் சிறுமி விற்ற மாம்பழங்களில் 12 மாம்பழத்தை ரூ.1,20,000 செலுத்தி வாங்கிக்கொண்டார். சிறுமி பெரும் அதிர்ச்சியடைந்தார். ஒவ்வொரு மாம்பழத்திற்கும் ரூ .10,000 செலுத்தி வாங்கியுள்ளார். பின்னர் அந்த மொத்த பணமும் கடந்த புதன்கிழமை சிறுமியின் தந்தை ஸ்ரீமல் குமாரின் கணக்கிற்கு மாற்றப்பட்டது.

Also read... ஆட்டோ மூலம் தடுப்பூசி விழிப்புணர்வு - சென்னை மாநகராட்சி ஆதரவு!

அமேயா ஹெட்டே என்ற அந்த மும்பை தொழிலதிபர் ஒரு ஸ்மார்ட்போன் வாங்குவதற்கும் ஆன்லைன் வகுப்புகளைத் தொடர உதவுவதற்கும் அவளிடமிருந்து ஒரு டஜன் மாம்பழங்களை வாங்கியுள்ளார். மேலும் அவர் குமாரிக்கு ரூ.13,000 மதிப்புள்ள மொபைல் போன் மற்றும் ஆண்டு முழுவதிற்கும் ரீசார்ஜ் செய்துள்ளார். இதனால் பெண் குழந்தையின் கல்வியில் எந்த இடையூறும் ஏற்படாது என்பதையும் உறுதிசெய்துள்ளார். இந்த சம்பவம், அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Online class