இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி கிண்டலுக்கு உள்ளான நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் தனது பங்கிற்கு ஒரு ட்வீட் போட்டுள்ளது.
இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில், இன்றைய போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளின் சீருடை ப்ளூ கலரை அடிப்படையாக கொண்டது என்பதால், இந்திய அணிக்கு மாற்று சீருடை வடிவமைக்கப்பட்டது.
அடர் ஆரஞ்சு நிறம் கலந்த ப்ளூ கலர் ஜெர்சி புதிதாக வடிவமைக்கப்பட்டது. ஆனால், இந்த ஜெர்சி ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் ஊழியர்களின் சீருடை போல இருக்கிறது என்று பலரும் கிண்டல் செய்ய, ஸ்விக்கி டெலிவரி பாய்ஸ்களின் டிரெஸ் போல இருக்கிறது என்றும் கேலிக்கள் எழுந்தது.
புது ஜெர்சியை வைத்து பல மீம்ஸ்களும் பறந்தது. இந்நிலையில், புது ஜெர்சி அணிந்து இன்று விளையாடும் இந்திய அணிக்கு, இந்தியன் ஆயில் நிறுவனம் பிரத்யேக வாழ்த்து தெரிவித்துள்ளது.
அதில், வண்ணங்கள் நாட்டை ஒன்றினைக்கின்றன. இந்திய அணிக்காக எங்களுடன் இணையுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சீருடையுடன் பெட்ரோல் பங்க் ஊழியர் இருக்கும் புகைப்படமும், புதிய ஜெர்சியுடன் விராட் கோலி இருக்கும் புகைப்படமும் அதில் இணைக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.