ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஹார்லி டேவிட்சன் பைக்கில் பால் விற்பனை செய்யும் நபர்..! வைரல் வீடியோ..!

ஹார்லி டேவிட்சன் பைக்கில் பால் விற்பனை செய்யும் நபர்..! வைரல் வீடியோ..!

வைரலாகும் பால் வியாபாரியின் வீடியோ

வைரலாகும் பால் வியாபாரியின் வீடியோ

இணையத்தை கலக்கும் பால் வியாபாரின் வீடியோ. ஹார்லி டேவிட்சன் பைக்கில் பால் வியாபாரம் செய்து ஆச்சரியத்தில் ஆழ்த்திய நபர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இணையத்தில் பரவும் வீடியோக்கள் மிகவும் ஆச்சரியம் அளிக்கும் விதமாகவே அமைகின்றன. உலகின் கடைக்கோடியில் நடக்கும் சம்பவத்தை கூட நம்மால் இப்போது காண இயல்கிறது. இதனால் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் தினமும் நம்மை கடந்து செல்கின்றன.

அந்த வகையில் இப்போது பால் வியாபரம் செய்யும் ஒருவரின் வீடியோ வைரலாகி வருகிறது. இதில் என்ன ஆச்சரியம் என்ன நீங்கள் நினைக்கலாம். பொதுவாகவே பைக் என்றால் ஆண்களுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. அதிலும் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் விலையுயர்ந்த பைக்குகளை வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாகவே அமைகிறது. பல லட்சங்கள் போட்டு வாங்கும் பைக்குகளை பொன்போல் ஆண்கள் பாதுகாப்பதும் நாம் அறிந்தவையே.

தினமும் காலையில் பால்காரர்கள் தங்கள் சைக்கிளில் வருவதைப் பார்த்திருப்போம். ஆனால் இங்கு ஒரு பால் வியாபாரி, பலரின் கனவுகளில் இருக்கும் ஒன்றான ஹார்லி டேவிட்சன் பைக்கில் பால் வியாபாரம் செய்து வருகிறார். தனது 3 லட்சம் மதிப்பிலான ஹார்லி டேவிட்சன் பைக்கின் இரண்டு பக்கமும் பெரிய பால் கேன்களை மாட்டிக்கொண்டு செல்கிறார். இதில் ஹைலைட் என்னவென்றால் அந்த பால் கேனின் ஒரு பிடிப்பகுதியில் ஹெல்மெட்டை தொங்கவிட்டுள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by Amit Bhadana (@amit_bhadana_3000)இந்த வீடியோ வைரலாகி வருகிறது. லட்சக்கணக்கில் பார்வையாளர்களை கடந்து லைக்குகளையும் குவித்துள்ளது.

First published:

Tags: Trending News, Viral