ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

’எனக்கு யாராவது வேலை கொடுங்க...’ - உருக்கமான கோரிக்கை வைத்த அமெரிக்க வாழ் இந்தியர்.!

’எனக்கு யாராவது வேலை கொடுங்க...’ - உருக்கமான கோரிக்கை வைத்த அமெரிக்க வாழ் இந்தியர்.!

ராஜு கடம்

ராஜு கடம்

Metalayoff | ராஜு கடம் ஹெச்1பி விசா அடிப்படையில் அமெரிக்காவில் வசித்து வருகிறார். வெகு விரைவில் வேலை கிடைக்காவிட்டால் இவர் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு இது இறங்குமுக காலம் என்றே குறிப்பிடலாம். குறிப்பாக ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதள நிறுவனங்களில் பணியாற்றி வரும் உள்ளூர் அமெரிக்கர்கள் மற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர்கள் உட்பட பலரும் வேலை இழந்து வருகின்றனர். ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை நடத்தி வரும் மெடா நிறுவனம், அண்மையில் 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இது அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளர்களில் 13 சதவீதம் ஆகும்.

மெடா நிறுவனம் மட்டுமல்ல, டிவிட்டர், அமேசான், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற நிறுவனங்களில் கர்ப்பிணி பெண்களும் கூட தயவு தாட்சண்யம் இன்றி பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். வேலை இழந்த ஊழியர்கள் பலரும் வாழ்வாதாரத்தை இழந்து அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

மெடா நிறுவனத்தில் சீனியர் டெக்னிக்கல் ப்ரோக்ராம் மேனேஜராக பணியாற்றி வந்தவர் ராஜு கடம். இவர் ஹெச்1பி விசா அடிப்படையில் அமெரிக்காவில் வசித்து வருகிறார். வெகு விரைவில் வேலை கிடைக்காவிட்டால் இவர் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்.

இதனால் தனக்கு யாரேனும் வேலை பரிந்துரை செய்யுமாறு, வேலைவாய்ப்பு தகவல்கள் மற்றும் சமூக தொடர்புகளை வழங்கி வரும் லிங்க்டு இன் இணையதளத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், “மெடா நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 11 ஆயிரம் ஊழியர்களில் துரதிஷ்டவசமாக நானும் ஒருவன் என்பது தெரியவந்தது. நான் இதை எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், நிறுவனத்தில் மிகுந்த பணித்திறனை நான் வெளிப்படுத்தி வந்தேன். மெடா நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த 9 மாதங்களில் என்னுடைய பணிக் காலம் முடிவுக்கு வந்துள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read : வட்டமாக நடைபோட்ட செம்மறி ஆடுகள்.. ஷாக்கான ஓனர்.. விலகாத மர்மம்... வைரல் வீடியோ.!

சுமார் 16 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வரும் ராஜுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். ராஜுவின் பதிவுக்கு ஏராளமான சமூக வலைதள பயனாளர்கள் லைக் செய்து, தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். வேலைவாய்ப்பு தொடர்பான பரிந்துரைகளையும் வழங்கி வருகின்றனர்.

உங்கள் தகவல்களை எனக்கு அனுப்பி வையுங்கள். என்னால் முடிந்த வரையில் நான் உதவி செய்ய முயற்சிக்கிறேன் என்று அமிதா என்ற பெண் பதிவு செய்துள்ளார்.

மற்றொரு பணியாளர் பதிவு செய்துள்ள கமெண்டில், ஊபர் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் இருந்தால் பரிந்துரை செய்வதாகவும், தனி விவரங்களை தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Also Read : நான்கு கண்டங்கள் கடந்து, 30,000 கி.மீ பயணித்து உணவு டெலிவரி செய்த பெண்... சுவாரஸ்ய சம்பவம்

ராஜுவுடன் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர் பதிவு செய்துள்ள கமெண்டில், “நீங்கள் ஆகச் சிறந்த ஊழியர். உங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுடன் பணியாற்றிய நாட்கள், உணவருந்திய நாட்களை தற்போது தவற விடுகிறேன்’’ என்று உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

Published by:Selvi M
First published:

Tags: Meta, Tamil News, Trending