ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

விடுமுறையில் இருக்கும் ஊழியர்களை தொந்தரவு செய்தால் ரூ.1 லட்சம் அபராதம்…! ஐ.டி நிறுவனம் அதிரடி

விடுமுறையில் இருக்கும் ஊழியர்களை தொந்தரவு செய்தால் ரூ.1 லட்சம் அபராதம்…! ஐ.டி நிறுவனம் அதிரடி

விடுமுறையில் இருக்கும் ஊழியர்களை தொந்தரவு செய்தால் ரூ.1 லட்சம் அபராதம்…!

விடுமுறையில் இருக்கும் ஊழியர்களை தொந்தரவு செய்தால் ரூ.1 லட்சம் அபராதம்…!

இந்த புதிய திட்டத்தால் இனி விடுமுறை எடுத்துக்கொள்ளும் ஊழியர்கள் அவர்களின் அலுவலக மொபைல் எண், இமெயில், மெசேஜ் என அனைத்தையும் நிறுத்திக்கொள்வார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விடுமுறையில் இருக்கும் ஊழியர்களை மேலாளர் அல்லது சக ஊழியர்கள் யாராவது போன் மூலம் தொந்தரவு செய்தால் அவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று இந்தியாவை சேர்ந்த Dream 11 நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒருவர் வீட்டிலிருந்தோ அல்லது அலுவலகத்தில் இருந்தோ பணிபுரிந்தாலும், அவசர அழைப்புகள், மின்னஞ்சல்கள் மற்றும் பிற அறிவிப்புகளை முதலாளிகள் அல்லது அலுவலக நிர்வாகத்திடமிருந்து வேலை நாட்களில் பெறுவது நல்லது. ஆனால், எந்த ஒரு பணியாளருக்கும் அழைப்புகளில் தொந்தரவு ஏற்பட்டாலோ அல்லது விடுமுறை நாட்களில் அலுவலகத்திற்கு வரச் சொன்னாலோ ஆத்திரம் அடைவது இயற்கையானது. குறிப்பாக அவர்களின் மேலதிகாரிகள் காலம் நேரம் பார்க்காமல் எந்த நேரத்திலும் தொலைபேசியில் அழைத்து வேலை செய்யச் சொல்வார்கள்.

அதற்கு ஊழியர்களும் வாங்கும் சம்பளம் நிலைக்க வேண்டுமே என்பதற்காக அனைத்தையும் சகித்துக்கொண்டு வேலை செய்வார்கள். பலர் இதன் காரணமாக குடும்பத்துடன் நேரம் செலவழிக்கமுடியாமல் அதிகப்படியான மன அழுத்தத்தில் வேலை செய்கிறார்கள். இதற்கு புதிய தீர்வு ஒன்றை இந்தியாவை சேர்ந்த நிறுவனமான Dream 11 நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதில் அந்த நிறுவனத்தில் விடுமுறையில் உள்ள ஊழியர்களை தொந்தரவு செய்தால் அவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் என்று அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை அந்த நிறுவனம் Dream11 Unplug Policy என்று அழைத்துள்ளது.

இந்த புதிய திட்டத்தால் இனி விடுமுறை எடுத்துக்கொள்ளும் ஊழியர்கள் அவர்களின் அலுவலக மொபைல் எண், இமெயில், மெசேஜ் என அனைத்தையும் நிறுத்திக்கொள்வார்கள். இவர்களை அதையும் மீறி தொந்தரவு செய்யும் உயர் அதிகாரிகளுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ஊழியர்கள் அவர்களின் குடும்பத்துடன் சந்தோஷமாக நேரத்தை செலவழிக்கலாம் என்றும் இதனால் அவர்களால் நிம்மதியாக இனி ஓய்வு எடுக்கமுடியும் என்றும் புத்துணர்ச்சி பெறமுடியும் எனவும் அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது குறித்து டிரீம் 11 இன் இணை நிறுவனர் பவித் ஷெத், கடந்த டிசம்பரில், செய்த் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இந்த புதிய கொள்கையானது அனைத்து தொழிலாளர்களும் ஆண்டுதோறும் குறைந்தது ஒரு வாரமாவது விடுமுறை எடுப்பதை கட்டாயமாக்குகிறது என்றும், தங்கள் பணியாளர்கள் "சுவிட்ச் ஆஃப் மற்றும் ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையை" பெறுவதை உறுதி செய்வதற்கான நிறுவனத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என தெரிவித்தார்.

Also Read : 500 ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கிய ஷேர்சாட் நிறுவனம்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்

2019 ஏப்ரல் மாதத்தில், ட்ரீம்11 யூனிகார்னாக மாறிய முதல் இந்திய ஃபேன்டஸி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஆகும். 2008 இல் நிறுவப்பட்ட ட்ரீம்11 நிறுவனம் இப்போது 1,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது மற்றும் டைகர் குளோபல் மற்றும் டென்சென்ட் போன்ற முதலீட்டாளர்களுடன் $8 பில்லியன் அளவில் வர்த்தகத்தை மேற்கொண்டுவருகிறது. மேலும் ஃபேன்டஸி கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து, கபடி, ஹேண்ட்பால், கூடைப்பந்து, கைப்பந்து, ரக்பி, ஃபுட்சல், அமெரிக்க கால்பந்து மற்றும் பேஸ்பால் போன்றவற்றை விளையாட இந்த தளம் பயனர்களை அனுமதிக்கிறது.

First published:

Tags: IT JOBS, Jobs