ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

Viral Video : உடனடி கர்மா கேள்வி பட்டதுண்டா? மனிதருக்கு ஒட்டகம் அளித்த ஸ்பெஷல் கர்மா - வைரலாகும் வீடியோ

Viral Video : உடனடி கர்மா கேள்வி பட்டதுண்டா? மனிதருக்கு ஒட்டகம் அளித்த ஸ்பெஷல் கர்மா - வைரலாகும் வீடியோ


கர்மா

கர்மா

Viral Video : கர்மா இயற்கையாக நடைபெறும் செயல். இதனை செயற்கையாக உருவாக்க நினைத்தால் அதற்கும் கர்மா தன் கர்ம பலனை காட்டும் என்பர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கர்மா இது குறித்து அறியாதோர் இலர். இது இயற்கையாக நடைபெறும் செயல். இதனை செயற்கையாக உருவாக்க நினைத்தால் அதற்கும் கர்மா தன் கர்ம பலனை காட்டும் என்பர்.

கர்மா (Karma) அல்லது வினைப்பயன் என்பது ஒருவரின் தற்போதைய மற்றும் முந்தைய ஜென்மத்தில் செய்த செயல்களின் கூட்டுத்தொகையாகும், இது எதிர்கால இருப்பில் அவர்களின் தலைவிதியை தீர்மானிக்கிறது. இந்து சமயங்களில் கர்மம் என்ற சொல்லுக்கு செயல் என்பது பொதுவான பொருள். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை ஏற்படும் என்பது உலகப் பொது வழக்கு.

அந்த வழக்கு போலவே, இந்து, பௌத்தம் மற்றும் சமண சமயத்திலும் ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றாற்போல் பலன் கிட்டும் என்பதை குறிப்பதற்கு 'கர்மா' சென்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதனை தமிழில் ”வினைப்பயன்” என்றும் கூறுவர்.ஒருவன் எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான். கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் அல்லது கர்மவினை ஆகும். அவரவர் கர்மம் அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது. நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது வேதவாக்கு.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல் தற்போதைய நடிகை சமந்தா வரை கர்மா குறித்து நான் கர்மாவை நம்புகின்றேன் என நேர்காணல் நிகழ்ச்சிகளில் கூறியுள்ளனர். தற்போது கர்மா குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. இது விலங்குகளை தொந்தரவு செய்பவருக்கு நேர்ந்த கர்மா. சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மனிதர் ஒருவர் அமைதியாக நடந்து வந்த ஒட்டகத்தை அதன் பின் பகுதியின் வாலை பிடிக்க முயற்சி செய்துள்ளார். உடனே இதனை உணர்ந்த ஒட்டகம் இளைஞரின் செயலுக்கு பயப்படாமல் தனது காலை வைத்து ஒரே உதை விட்டதில் இளைஞர் சரிந்து கீழே விழுந்தார்.

இந்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உடனடி கர்மா (Instant Karma.) என பதிவு செய்துள்ளார்.இதற்கு முன்னதாக இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா பசுமாடு ஒன்று நாயினை கொடுமை படுத்தியவருக்கு காட்டிய கர்மா வைரலானது.

அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் நாயின் காதினை பிடித்து இழுத்து கொடுமை படுத்துகிறார். இதனை கண்டு பசு மாடு ஒன்று ஓடி வந்து காப்பாற்ற முற்படுகின்றது. வாயில்லா விலங்குகளுக்கு விலங்குகளே துணை என்பது போல் இந்த வீடியோ உள்ளது.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Viral Video