Home /News /trend /

உயிருக்கு போராடிய நாய்... வாயோடு வாய் வைத்து மூச்சினை செலுத்திய மனிதர் - வைரலாகும் வீடியோ

உயிருக்கு போராடிய நாய்... வாயோடு வாய் வைத்து மூச்சினை செலுத்திய மனிதர் - வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

Viral Video : நாய் ஒன்றிற்கு ஒருவர் மூச்சு கொடுத்து காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    கடந்த வாரம் பெரம்பலூரில் மயக்க நிலையில் இருந்த குரங்குக்கு மூச்சு கொடுத்து ஒருவர் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலானது.

    அதில், ‘40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாலையில் ஓரத்தில் மயக்க நிலையில் இருந்த குரங்கின் நெஞ்சை அழுத்தி அதன் இதயத்துடிப்பை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்கிறார். அந்த குரங்கு எழும்பாத நிலையில் அதன் வாயோடு வாய் வைத்து மூச்சைக் கொடுக்கிறார்.

    அதன் பிறகு குரங்கு எழுகிறது. குரங்கு உயிர்பிழைத்ததை பார்த்து மகிழ்ச்சியின் உச்சத்துக்கு செல்கிறார். இந்தச் சம்பவம் பெரம்பலூரில் நடைபெற்றுள்ளது. அந்த நபருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.



    தற்போது அதனை போன்று நாய் ஒன்றிற்கு ஒருவர் மூச்சு கொடுத்து காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

     



    அதில் அனைத்து உயிர்களின் வாழ்வும் முக்கியத்துவம் வாய்ந்தது. என தலைப்போடு பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் நாய் ஒன்று அசைவுகள் அற்று கீழே படுத்து கொண்டிருக்க நாயின் உயிரை மீட்டுக் கொண்டு வர இளைஞர் ஒருவர் தன்னால் முடிந்த அளவு போராடி வருகின்றார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Trending, Viral Video

    அடுத்த செய்தி