Home /News /trend /

உயிர்வாழ இது தேவை... இதனை வழங்கும் ஒருவராக இருங்கள் - வைரலாகும் வனத்துறை அதிகாரி பதிவிட்ட வீடியோ

உயிர்வாழ இது தேவை... இதனை வழங்கும் ஒருவராக இருங்கள் - வைரலாகும் வனத்துறை அதிகாரி பதிவிட்ட வீடியோ

வைரலாகும் வனத்துறை அதிகாரி பதிவிட்ட வீடியோ

வைரலாகும் வனத்துறை அதிகாரி பதிவிட்ட வீடியோ

Viral Video : ஒருவர் உயிர்வாழ சில துளிகள் தண்ணீர் மட்டுமே தேவை. அதை வழங்க ஒருவராக இருங்கள் என இந்திய வனத்துறை அதிகாரி பதிவிட்டுள்ள வீடியோ இணையத்தில் பலரின் கவனம் பெற்றுள்ளது.

    இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இணையத்தில் வைரலாகும் விலங்குகள் குறித்த வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்விதம் தற்போது வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், தாகத்தால் தவித்து வாடிய முள்ளம்பன்றிக்கு பிளாஸ்டிக் தண்ணீர் கேனில் ஒருவர் தண்ணீர் அளிக்கின்றார். மிகவும் வறட்சியான நிலத்தில் குச்சியை பிடித்த படி தாகத்தை முள்ளம்பன்றி தணித்துக் கொண்டது.

    தாவர உண்ணிகளான முள்ளம்பன்றிகள், (Porcupine) ஊசி முனையுடைய நீண்ட முட்களால் போர்த்தப்பட்ட கொறிக்கும் விலங்குகளாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் வித்தியாசமான முள்ளம்பன்றி இனங்கள் வாழ்கின்றன. ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் காணப்படும் இனங்கள் ஹிஸ்ரிசைடியே (Hystricidae) என்ற விலங்குக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அமெரிக்கக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் முள்ளம்பன்றி இனங்கள் Erethizontidae என்ற விலங்குக் குடும்பத்தைச் சேர்ந்தவை.

    இலங்கை, மற்றும் இந்தியாவில் யில் பரவலாகக் காணப்படும் முள்ளம்பன்றி இந்தியன் பொகியுபின் (Indian Porcupine) எனப் பொதுவாக அழைக்கப்படும். இஸ்ரரிக் இன்டிகா (Hysterix indica) என்ற இனத்தைச் சேர்ந்தவை. இவை பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், வங்காளதேசம், இஸ்ரேல், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன.



    ஒருவர் உயிர்வாழ சில துளிகள் தண்ணீர் மட்டுமே தேவை. அதை வழங்க ஒருவராக இருங்கள் என இந்திய வனத்துறை அதிகாரி இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Viral Video

    அடுத்த செய்தி