ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

விமான அதிகாரிகளை தாக்கியதற்காக பிரெஞ்சு விமானத்தில் இருந்து பாதியிலேயே இறக்கிவிடப்பட்ட இந்தியப்பயணி!

விமான அதிகாரிகளை தாக்கியதற்காக பிரெஞ்சு விமானத்தில் இருந்து பாதியிலேயே இறக்கிவிடப்பட்ட இந்தியப்பயணி!

மாதிரி படம்

மாதிரி படம்

விமானத்தில் இருந்த இந்தியப் பயணி ஒருவர் மற்றவர்களுடன் ஆணவத்துடன் நடந்து கொண்டதாகவும், விமானக்குழு அதிகாரிகளை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

கடந்த வெள்ளிக்கிழமை மாலை பாரிஸிலிருந்து புதுடெல்லிக்கு செல்லும் ஏர் பிரான்ஸ் விமானம் பல்கேரியாவின் சோபியாவில் திடீரென தரையிறக்கப்பட்டது. ஒரு இந்தியப் பயணி செய்த ஆராஜகத்தால் விமானம் தரையிறக்கப்பட்டதாக ஊடக அறிக்கை ஒன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆதாரங்களை மேற்கோள் காட்டி, பல்கேரிய செய்தி நிறுவனம் (BTA) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, விமானத்தில் இருந்த இந்தியப் பயணி ஒருவர் மற்றவர்களுடன் ஆணவத்துடன் நடந்து கொண்டதாகவும், விமானக்குழு அதிகாரிகளை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் விமானத்தின் காக்பிட் கதவுகளைத் பலமாக தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடையூறு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதற்காக அந்த பயணி 24 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக BTA அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சோபியாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பயணிகள் இதுபோன்ற வன்முறை சம்பவத்தில் ஈடுபடுவது ஒன்றும் முதல்முறை அல்ல. இதேபோன்ற பல நிகழ்வுகள் விமானப்பயணத்தின் போது நடந்துள்ளன.

1. ஆகஸ்ட் 2014 இல், மெல்போர்னில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த ஒருவர், அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தியதால் தொடர்ந்து தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நபர், குழு உறுப்பினர்களால் இருக்கையில் கட்டி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வந்த தகவல்களின்படி, பயணி மிகவும் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாகவும், இரண்டு விமான பணிப்பெண்களின் ஆடைகளை கிழித்து, சக பயணிகளை கடிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

2. கடந்த ஆண்டு ஜனவரி மாதம், சில பயணிகள் விமானக் கேபின் குழு உறுப்பினர்களைக் தாக்கியதாகவும், ஏர் இந்தியாவின் போயிங் 747 விமானத்தின் காக்பிட் கதவைத் திறப்பதாக அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து டெல்லி-மும்பை விமானம் தொழில்நுட்ப சிக்கலால் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் தாமதமாக கிளம்பியது என்று விமான அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

3. 2019 ஆம் ஆண்டு அக்டோபரில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் மும்பையில் உள்ள ஏர் இந்தியா விமானத்தில் உள்ள பணியாளர்களுடன் தவறாக நடந்து கொண்டதற்காக தரையிறக்கப்பட்டனர். இதன் விளைவாக, மும்பையில் இருந்து கோவா செல்லும் AI-663 விமானம் ஐந்து மணி நேரம் தாமதமானது.

4. இதேபோல, கடந்த ஆண்டு ஜூன் மாதம், விமானத்தில் பயணித்த சக பயணியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி பெரிந்தல்மன்னா நகரத்தைச் சேர்ந்த 60 வயதான நபர் மீது கேரளா காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மஸ்கட்டில் இருந்து கோழிக்கோடு செல்லும் ஓமான் ஏர் சார்ட்டர் விமானத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தப் பெண் தனது மகனுடன் கேரளாவுக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் விதிக்கப்பட்ட புதிய பயண நடைமுறை காரணமாக பயணிகளிடையே ஏற்படும் அதிகரித்த மனஅழுத்தம் விமானக்குழு அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்களாக இருப்பதால் கடந்த ஆண்டு ஏவியேஷன் ரெகுலேட்டர் டி.ஜி.சி.ஏ விமான நிறுவனங்கள் மற்றும் அவர்களின் கேபின் குழு உறுப்பினர்களுக்கு கட்டுக்கடங்காத பயணிகளைக் கையாள்வதற்கான புதிய விதிகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: France