முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / இந்திய ரசிகர் அனுப்பிய வீடியோவை பார்த்து டென்ஷனாகி திட்டிய மியா கலிஃபா

இந்திய ரசிகர் அனுப்பிய வீடியோவை பார்த்து டென்ஷனாகி திட்டிய மியா கலிஃபா

மியா கலிஃபா

மியா கலிஃபா

மியா கலிஃபாவுக்கு இந்திய ரசிகர் அனுப்பிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உடலில் டாட்டூ குத்திக்கொள்ளும் கலாச்சாரம் இந்திய இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தனக்கு விருப்பமான ஸ்போர்ட்ஸ் ஸ்டார்கள், சினிமா பிரபலங்களை டாட்டூ-வாக குத்திக்கொள்கிறார்கள். அந்த நபரின் மீது கொண்ட மிகுந்த ஈடுபாட்டின் காரணமாக இவ்வாறு செய்கின்றனர்.

ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்ற மியா கலிஃபா-வின் முகத்தை இந்திய இளைஞர் ஒரு டாட்டூவாக குத்திய வீடியோவும் அதற்கு மியா அளித்த ரியாக்‌ஷனும்  இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.மியா கலிஃபாவுக்கு இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதன்காரணமாகவே இந்த வீடியோ மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்றது.

மியா கலிஃபாவின் முகத்தை இந்திய இளைஞர் ஒருவர் தனது காலில் டாட்டூவாக போட்டுள்ளார். அந்த வீடியோவை tattoo_artists_01 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் முதலில் ஒரு மொபைலில் மியா கலிஃபாவின் முகம் தெரிகிறது. அதன்பின்னர் அந்த இளைஞர் தன் காலில் மியா கலிஃபாவின் டாட்டூவை வரைந்திருப்பதை காட்டுகிறார்.




 




View this post on Instagram





 

A post shared by Arjun tattooz (@tattoo_artist_01)



இந்த வீடியோ மியா கலிஃபாவின் பார்வைக்கு வந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்தவர் தனது அதிருப்தியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதுமிகவும் பயங்கரமானது எனக்கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக ஸ்மைலி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இந்த டாட்டூ விவகாரம் வைரலாகி டாட்டூ போட்ட இளைஞருக்கும் அதனை வரைந்த கலைஞருக்கும் ஏராளமான ஃபாலோயர்ஸ்கள் குவியத் தொடங்கிவிட்டனர். அந்த ரசிகர் மியாவின் பதிவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த வீடியொவை 4 மில்லியன் பேர் பார்த்திருப்பதாகவும் அவர்களுக்கு தன் நன்றியை தெரிவித்துள்ளார்.




 




View this post on Instagram





 

A post shared by Arjun tattooz (@tattoo_artist_01)



மியா கலிஃபா டாட்டூவை ரசிகர்கள் பச்சைக்குத்திக் கொள்வது இதுஒன்றும் முதல்முறையல்ல.2018 -ம் ஆண்டு இளைஞர் ஒருவர் டாட்டூ குத்திக்கொண்டார். அப்போதே அவர் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். தான் இதனை விரும்புவதில்லை எனத் தெளிவாக கூறினார். எனது முகத்தை அல்லது பெயரை டாட்டுவாக குத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள். இது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கக்கூடியது இல்லை.ஒருவரின் முகத்தை வேறொருவரின் உடலில் வரைவது என்பது சரியானதல்ல” என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Adultery, Instagram, Mia Khalifa, Tattoos, Video