இந்திய இளைஞருக்கு துபாயில் நிகழ்ந்த அதிசயம் - லாட்டரியில் அடித்த ஜாக்பாட்

மாதிரி படம்

DDF எனப்படும் துபாய் லாட்டரி மூலம் பரிசுத் தொகை பெரும் 171-வது இந்தியர் என்ற சாதனைக்கும் நவனீத் சஞ்சீவன் சொந்தக்காரராக மாறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கடன்தொல்லை, பணநெருக்கடி என துபாயில் அவதிப்பட்டு வந்த இந்திய இளைஞருக்கு லாட்டரியில் 7 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்ததால், ஒரே இரவில் கோடீஸ்வரனாக மாறியுள்ளார்.

கேரளா மாநிலம் காசர்கோட் பகுதியைச் சேர்ந்த நவனீத் சஞ்சீவன் என்ற 30 வயது இளைஞர். மனைவி மற்றும் குழந்தையுடன் துபாயில் வசித்து வருகிறார். கொரோனா வைரஸ் பாதிப்பால் வேலையை இழந்த அவர், கடன் நெருக்கடியாலும் அவதிப்பட்டு வந்துள்ளார். புதிய வேலைக்காக நாள்தோறும் வெவ்வேறு நிறுவனங்களில் நேர்முகத்தேர்விலும் கலந்து கொண்டிருக்கிறார்.

கடுமையான மன உளைச்சலில் இருந்த அவர் ஏதாவது அதிசயம் நிகழாதா என நவம்பர் 22ம் தேதி DDF எனப்படும் துபாய் லாட்டரி வாங்கியுள்ளார். அந்த லாட்டரியில் தற்போது அவருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 7 கோடி ரூபாய்க்கு மேலான தொகை பரிசாக விழுந்துள்ளது. 

இந்த செய்தியைக் கேட்டதும் மகிழ்ச்சியில் திளைத்த அவர், சோதனையான காலகட்டத்தில், லாட்டரியில் அடித்த ஜாக்பாட் தங்களின் வாழ்க்கையை கரைசேர்த்திருப்பதாக கூறியுள்ளார். ஏற்கனவே இருக்கும் 10 ஆயிரம் திர்ஹாம் கடனை அடைத்துவிட்டு எஞ்சிய பணத்தை உரிய முறையில் முதலீடு செய்வேன் என சஞ்சீவன் தெரிவித்துள்ளார்.

மனைவி தொடர்ந்து வேலைக்கு சென்று கொண்டிருப்பதாகவும், தனக்கு வேலை கிடைக்கவில்லையென்றால் இந்தியாவுக்கே மீண்டும் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் கூறிய சஞ்சீவன், லாட்டரி மூலம் இவ்வளவு பெரிய பரிசுத் தொகை கிடைக்கும் என்று முதலில் நம்பவில்லை எனக் கூறியுள்ளார். 

Also read... Mi 10T Pro இல்லாவிட்டால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றவருக்கு அடித்தது ஜாக்பாட்

இதேபோல், துபாயைச் சேர்ந்த கலீல் ஜேக்கப் என்பவருக்கும் லாட்டரியில் பரிசுத்தொகை விழுந்துள்ளது. DDF எனப்படும் துபாய் லாட்டரி மூலம் பரிசுத் தொகை பெரும் 171-வது இந்தியர் என்ற சாதனைக்கும் நவனீத் சஞ்சீவன் சொந்தக்காரராக மாறியுள்ளார். அண்மையில், இந்திய தொழிலதிபர் ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலரும், துபாயில் வசிக்கும் இந்தியர் ஒருவருக்கு 12 மில்லியன் திர்ஹாமும் ஜாக்பாட் அடித்திருந்தது.

தற்போது 37வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள துபாய் லாட்டரியை அதிகளவு இந்தியர்கள் வாங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, துபாயில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமல்லாது, இந்தியாவில் வசிப்போரும் ஆன்லைன் மூலமாக துபாய் லாட்டரி வாங்குவது தெரியவந்துள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: