ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

7 கண்டங்களை வெறும் 73 மணி நேரத்தில் சுற்றி வந்த இந்தியர்கள்... கின்னஸ் சாதனை முறியடிப்பு

7 கண்டங்களை வெறும் 73 மணி நேரத்தில் சுற்றி வந்த இந்தியர்கள்... கின்னஸ் சாதனை முறியடிப்பு

மருத்துவர் அலி ஹுசைன் இராணி மற்றும் சுஜோய் குமார்

மருத்துவர் அலி ஹுசைன் இராணி மற்றும் சுஜோய் குமார்

விமானப் பயணங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர்கள் இருவரும், உலக சாதனைகளை முறியடிப்பதை தங்கள் இலக்காக கொண்டிருக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகை 80 நாட்களில் சுற்றி வரலாம் என்பது குறித்து ஜூல்ஸ் வெர்னஸ் எழுதிய நாவல் ஒன்றை நாம் நமது இளமைக் காலத்தில் படித்திருப்போம். இப்போதெல்லாம் இளைஞர்கள் கார் அல்லது பைக் எடுத்துக் கொண்டு மிக, மிக, அதிவேகத்தில் பயணித்து தொலைதூர இடங்களுக்கு குறைவான நேரத்தில் சென்றடைந்தது குறித்து யூடியூப், டிக் டாக் வீடியோக்கள் மூலமாகவும் பார்த்து வருகிறோம்.

எனினும், உலகில் உள்ள ஏழு கண்டங்களையும் சுற்றி வருவதற்கு துல்லியமாக எத்தனை நாட்கள் ஆகும் என்று கணக்கு போட்டுள்ளீர்களா? இதற்கு முன்பு 3 நாட்கள் 1 மணி நேரம், 5 நிமிடங்கள் மற்றும் 4 நொடிகளில் உலகை வலம் வந்ததுதான் கின்னஸ் சாதனையாக இருந்தது. தற்போது இந்தியர்கள் இருவர் அந்தச் சாதனையை முறியடித்து 73 மணி நேரத்தில் 7 கண்டங்களையும் சுற்றி வந்துள்ளனர். மருத்துவர் அலி ஹுசைன் இராணி மற்றும் சுஜோய் குமார் ஆகியோர் இந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள் ஆவர்.

விமானப் பயணங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர்கள் இருவரும், உலக சாதனைகளை முறியடிப்பதை தங்கள் இலக்காக கொண்டிருக்கின்றனர். கின்னஸ் சாதனையில் இடம்பெற்றது குறித்து அலி இராணி மற்றும் சுஜோய் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றைய தினம் உலக சாதனையை முறியடித்து நாங்கள் வெற்றி கண்டிருக்கலாம். ஆனால், நாளைய தினம் எங்கள் சாதனையை வேறொருவர் முறியடிக்க கூடும்.

அலி இராணி, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், உலகை சுற்றி வந்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், தங்கள் சாதனையை அங்கீகரித்து வழங்கப்பட்டுள்ள கின்னஸ் சான்றிதழையும் பகிர்ந்துள்ளார். கடந்த வாரத்தில் ஷேர் செய்யப்பட்ட இந்தப் பதிவை பலரும் லைக் செய்வதோடு, அவர்களது சாதனையை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

சமூக வலைதள பயனாளர்களின் பாராட்டு:

இன்ஸ்டாகிராம் பதிவாளர் ஒருவர், உலக சாதனை பயணத்தை பாராட்டி வெளியிட்டுள்ள பதிவில், “அர்ப்பணிப்பு கொண்ட முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இந்தியர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவரின் பதிவில், இந்த புத்தாண்டில் கிடைத்த சிறப்பான செய்தி இதுதான் என்று கூறியுள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by Prof Dr Ali Irani (@dralirani)கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்களை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன் என்று மற்றொரு பதிவாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த சாதனை குறித்து மாறுபட்ட விமர்சனங்களையும் சிலர் முன்வைத்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், “பயணம் என்பது உலகின் பல இடங்களில் உள்ள இயற்கையின் பேரழகை நின்று, நிதானித்து ரசிக்கும் வகையில் அமைய வேண்டும். வெறும் சாதனைக்காக ஓடோடி பயணிப்பதால் எந்தப் பலனும் கிடையாது’’ என்று தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Trending, Viral