Home /News /trend /

திருநங்கைகள் இனி குழந்தை பெற்றுக்கொள்ளலாம் - நவீன மருத்துவம் மூலம் சாத்தியப்படுத்த முயற்சிக்கும் இந்திய மருத்துவர்..!!

திருநங்கைகள் இனி குழந்தை பெற்றுக்கொள்ளலாம் - நவீன மருத்துவம் மூலம் சாத்தியப்படுத்த முயற்சிக்கும் இந்திய மருத்துவர்..!!

மாதிரி படம்

மாதிரி படம்

Womb Transplant | திருநங்கைகளுக்கு இயற்கையாகவே கர்ப்பப்பை கிடையாது. இருப்பினும், தனக்கென ஒரு குழந்தை வேண்டும் என்ற கனவு பல திருநங்கைகளுக்கு இருக்கக் கூடும். அத்தகையோரின் கனவுகளை நனவாக்குவதற்கு கை கொடுக்கிறது நவீன மருத்துவம். ஆம், மருத்துவ உலகில் மிகவும் அரிதான சிகிச்சையாக கர்ப்பப்பை மாற்று சிகிச்சை கருதப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
ஆணும், பெண்ணும் இணை சேர்ந்த பின்னர், பெண் மட்டுமே குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்பது இயற்கை நியதி. அதுவே, ஆணும், திருநங்கையும் இணை சேர்ந்தால் அவர்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் திருநங்கைகளுக்கு இயற்கையாகவே கர்ப்பப்பை கிடையாது. இருப்பினும், தனக்கென ஒரு குழந்தை வேண்டும் என்ற கனவு பல திருநங்கைகளுக்கு இருக்கக் கூடும்.

அத்தகையோரின் கனவுகளை நனவாக்குவதற்கு கை கொடுக்கிறது நவீன மருத்துவம். ஆம், மருத்துவ உலகில் மிகவும் அரிதான சிகிச்சையாக கர்ப்பப்பை மாற்று சிகிச்சை கருதப்படுகிறது. அந்த சிகிச்சையை திருநங்கை ஒருவருக்கு செய்ய இந்திய மருத்துவர் திட்டமிட்டு வருவதாக ‘தி மிரர்’ என்ற ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிறப்பால் ஆணாக இருந்து, தற்போது திருநங்கை பெண்ணாக மாறியுள்ள அந்த நபருக்கு ஐவிஎஃப் சிகிச்சை மூலமாக குழந்தை பிறக்கச் செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது.

சிகிச்சை எப்படி சாத்தியம் ஆகும்

முதலில் குழந்தை பெற விரும்பும் திருநங்கைக்கு பெண்ணுறுப்பு பொருத்த வேண்டும். உயிரிழந்த பெண் ஒருவரின் பெண்ணுறுப்பை கொடையாக பெறுவது அல்லது ஆணாக மாறும் பெண் ஒருவரிடம் இருந்து பெண்ணுறுப்பு பெறுவதன் மூலமாக அதை திருநங்கைக்கு பொருத்த வேண்டும். அதைப் போலவே, கர்ப்பப்பை உறுப்பு மாற்று சிகிச்சையையும் செய்ய வேண்டும்.



பெண்ணாக மாறுவதே திருநங்கைகளின் விருப்பம் - மருத்துவர் தகவல்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை டெல்லியைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் நரேந்திர கௌசிக் செய்ய இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒவ்வொரு திருநங்கையும் கூடுமான வரையில் பெண்ணாக மாறுவதற்கே விரும்புகின்றனர். பெண்ணாக மாறுவதன் மூலமாக கர்ப்பம் அடைவதற்கான திறன் அதிகரிக்கிறது.

Also Read : 28 மனைவிகள் முன்னிலையில் 37வது திருமணம் செய்த நபர்..

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அல்லது வேறெந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைப் போலவே கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையும் இயல்பான ஒன்றுதான். அதை வெற்றிகரமாக செய்துவிட முடியும் எனக் கருதுகிறேன். எதிர்காலத்தில் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை என்பது மிக எளிமையானதாக மாறும் என நம்புகிறேன்’’ என்றார் அவர்.

Also Read : முகூர்த்த நேரத்தில் குடித்து கும்மாளம் போட்ட மணமகன்...மணமகள் எடுத்த நச் முடிவு

இதற்கு முன்பு இதுபோல சிகிச்சை செய்யப்பட்டதா

திருநங்கை ஒருவருக்கு கர்ப்பப்பை பொருத்தும் அறுவை சிகிச்சை இதற்கு முன்பு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டதாகவும், அடுத்த சில மாதங்களில் அந்த திருநங்கை உயிரிழந்து விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பெண்ணின் கர்ப்பப்பையானது ஒருபோதும் பெலோஃபியன் குழாய்களுடன் உண்மையான இணைப்பில் இருப்பது இல்லையாம். அத்தகைய சூழலில், அறுவை சிகிச்சைக்குப் பிறகும் நோயாளி இயற்கையாக கர்ப்பம் அடைய முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், திருநங்கைகளைப் பொருத்த வரையிலும் ஐவிஎஃப் சிகிச்சை மூலமாக கர்ப்பம் அடைய வைக்க முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Published by:Selvi M
First published:

Tags: Doctor, Transgender, Womb transplant

அடுத்த செய்தி