இந்திய ராணுவம் மேற்கு லடாக் பகுதியில் உள்ள இன்டஸ் ஆற்றில் அவசரக் காலத்தில் உதவும் வகையில் செயற்கைய பாலத்தைக் கட்டி தங்களின் பொறியியல் திறமையை நிரூபித்துள்ளனர்.
இந்திய ராணுவத்தில் பாதுகாப்புப் படையின் சப்த சக்தி பொறியாளர்கள் பிரிவு இன்டஸ் ஆற்றில் செயற்கையாகப் பாலம் கட்டும் பயிற்சியில் ஈடுப்பட்ட போது எடுத்த காணொளியை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் வாகனங்கள் மூலம் பாலம் கட்ட தேவைப்படும் இயந்திரங்களைக் கொண்டுவந்து விறுவிறு என்று செயற்கையாகப் பாலத்தை ராணுவ வீரர்கள் கட்டுவது புலப்படுகிறது.
இந்தியாவின் தென் மேற்கு பகுதியில் இருக்கும் ராணுவ குழு பயிற்சியின் ஒரு பங்காக இந்த பணியைச் செய்துள்ளனர். மேலும் பாலத்தைக் கட்டி முடித்தவுடன் அதன் மேல் கனரக வாகனங்கள் செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது. அதன் மூலம் இந்திய ராணுவம் குழுவாகச் செயல்படும் திறமை, அவர்களின் கட்டுமான திறமையைக் காணமுடிகிறது.
தற்போது இந்த காணொளி இணையதளத்தில் வெளியாகியுள்ள நிலையில் நெட்டிசன்கள் ஆச்சரியதுடன் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய ராணுவத்தின் தலைமை ஜெனரல் மனோஜ் பாண்டே லடாக் பகுதியில் ஆய்வு நடத்தினார். இந்திய விமானப்படையின் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டரில் பயணம் செய்து அந்த பகுதியின் ராணுவ அமைப்புகளைப் பார்வையிட்டார்.
'Bridging Challenges - No Terrain nor Altitude Insurmoutable’#SaptaShaktiEngineers in #EasternLadakh carrying out mobility tasks and training. Bridging the mighty #Indus River, enabling movement of both combat and logistic echelons.#SarvadaAgraniBde#IndianArmy@adgpi pic.twitter.com/7JxiNmhVlm
— SouthWesternCommand_IA (@SWComd_IA) September 11, 2022
இந்திய மற்றும் சீனாவின் ராணுவ எல்லைப் பகுதியாக இருக்கும் லடாக் பகுதியில் அவசரக் கால தாக்குதலுக்குத் தயாராகும் வகையில் தொடர் பயிற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, இந்த செயற்கை பாலத்தை சப்த சக்தி பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.