• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • கொரோனா நோயாளியை கண்டறிய மோப்பநாய் - பயிற்சியளிக்கும் இந்திய ராணுவம்!

கொரோனா நோயாளியை கண்டறிய மோப்பநாய் - பயிற்சியளிக்கும் இந்திய ராணுவம்!

கொரோனா நோயாளியை கண்டறிய மோப்பநாய்

கொரோனா நோயாளியை கண்டறிய மோப்பநாய்

வட இந்தியாவில் இருந்து உட்சபட்ச எல்லை பாதுகாப்பு பகுதிகளுக்கு ராணுவத்தினர் செல்லும் முகாம் ஒன்றுக்கு 8 நாய்கள் பயிற்சிகாக அனுப்பி வைக்கப்பட்டன. நாய்கள் இதில் தேர்ச்சி பெற்று விரைவாக களத்தில் இறக்கப்பட்டால், கொரோனா நோயாளிகளை கண்டறியும் வேகம் அதிகரிக்கும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பி.சி.ஆர் கருவிகள் கொண்டு அடையாளம் காணப்பட்டு வருகிறது. ஆனால், இதன் முடிவுகள் கிடைப்பதற்கு குறைந்தபட்சம் ஒருநாளாவது காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்கு தாமதமாவதால், கொரோனா பரவல் விகிதத்தை கட்டுப்படுத்துவது பெரும் சிரமமாக உள்ளது.

இதனால், கொரோனா நோயாளிகளை எளிதில் அடையாளம் காண உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. சில நாடுகள் நாய்களின் மோப்ப சக்தியை பயன்படுத்தி கொரோனா நோயாளிகளை எளிதில் அடையாளம் காண்பதால், அந்த டெக்னிக்கை இந்தியாவும் கையில் எடுத்துள்ளது.  

சிப்பிப்பாறை மற்றும் காக்கர் ஸ்பேனியல் இனத்தைச் சேர்ந்த நாய்களுக்கு நொடிப்பொழுதில் கொரோனாவை கண்டறியும் வகையிலான மோப்ப சக்தி பயிற்சியை இந்திய ராணுவம் வழங்கி வருகிறது. நோயாளியின் வியர்வை மற்றும் சிறுநீர் மாதிரிகளை வைத்து கொரோனாவை அடையாளம் காண்பதற்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து 7 நாய்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன

பல்வேறு உலக நாடுகள் விமான நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் நாய்களை பயன்படுத்தி கொரோனாவைக் கண்டறிந்து வருகின்றன. உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் கொரோனாவைக் கண்டறிய ராணுவத்தில் உள்ள நாய்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. இந்திய ராணுவத்தில் நாய்களுக்கு பயிற்சியளிக்கும் சுரேந்தர் சைனி பேசும்போது, இந்த முயற்சி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

வட இந்தியாவில் இருந்து உட்சபட்ச எல்லை பாதுகாப்பு பகுதிகளுக்கு ராணுவத்தினர் செல்லும் முகாம் ஒன்றுக்கு 8 நாய்கள் பயிற்சிகாக அனுப்பி வைக்கப்பட்டன. நாய்கள் இதில் தேர்ச்சி பெற்று விரைவாக களத்தில் இறக்கப்பட்டால், கொரோனா நோயாளிகளை கண்டறியும் வேகம் அதிகரிக்கும். கிராமபுறங்களுக்கு சென்று கோரோனா நோயாளிகளை கண்டறியும் சூழலும் குறையும் என நம்பப்படுகிறது.

Also read... கொரோனா காலத்தில் அரங்கேறிய Zoom Call அட்டகாசங்கள்!

கொரோனா பாஸிடிவ் வந்த சாம்பிள்களுக்கு அருகில் இந்த நாய்கள் அமரவைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டன. எதிர்மறையான முடிவுகள் வந்த பரிசோதனை சாம்பிள்களை நாய்கள் உடனடியாக கடந்து செல்கின்றன. இந்த நாய்கள் மக்கள் நேரடியாக பரிசோதனைக்கு உட்படுத்தும் இடங்களில் பயன்படுத்தப்பட உள்ளன. டெல்லி மற்றும் சண்டிகர் முகாம்களில் வைக்கப்பட்ட 3806 கோவிட் பரிசோதனைகளில் 22 கொரோனா பாசிடிவை ஜெயா மற்றும் காஸ்பர் மோப்ப நாய்கள் கண்டுபிடித்துள்ளன.

வைரஸால் பாதிக்கப்பட்ட அல்லது தொற்று கிருமிகளை கொண்ட திசுகளை அடையாளம் காணும் பயிற்சியில், இந்தியாவில் நாய்களை பயன்படுத்துவது இதுவே முதல்முறையாகும். டெல்லியில் உள்ள ராணுவ கால்நடை மருத்துவமனையில், மோப்ப நாய்களைக் கொண்டு கொரோனா பாதிப்பை கண்டறியும் செயல்முறை விளக்கம் கொடுக்கப்பட்டது. அப்போது, நாய்களுக்கு அருகில் முழு பாதுகாப்பு கவசங்களை அணிந்தவாறு ராணுவ வீரர்கள் இருந்தனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: