மக்களவையில் தமிழில் முழக்கமிட்ட எம்பிக்கள்...! இந்திய அளவில் டிரெண்டாகும் #தமிழ்வாழ்க

மக்களவையில் பாஜக எம்.பிகள் சிலர் பாரத் மாதா கி ஜே என முழக்கமிட்டனர்

Vijay R | news18
Updated: June 18, 2019, 4:58 PM IST
மக்களவையில் தமிழில் முழக்கமிட்ட எம்பிக்கள்...! இந்திய அளவில் டிரெண்டாகும் #தமிழ்வாழ்க
டிரெண்டாகும் #வாழ்கதமிழ்
Vijay R | news18
Updated: June 18, 2019, 4:58 PM IST
மக்களவையில் தமிழக எம்பிக்கள் தமிழ் வாழ்க முழக்கமிட்டு பதவி பிரமாணம் செய்ததால், நெட்டிசன்கள் #தமிழ்வாழ்க என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நேற்று முதல் மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்று வருகின்றனர்.  தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிகள் இன்று பதவியேற்றனர். மக்களவையின் தற்காலிக சபாநாயகர் வீரேந்திரக் குமார் எம்.பி.களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக எம்.பிக்கள் தமிழிலேயே பதவியேற்றுக் கொண்டனர். தயாநிதி மாறன்  “வாழ்க தமிழ்“, “வாழ்க கலைஞர்“, “வாழ்க பெரியார்“ என்ற முழக்கத்துடன் பதவியேற்று கொண்டனர். கனிமொழி  “வாழ்க தமிழ்“, “வாழ்க பெரியார்“  என்று பதவியேற்றார்.


அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினரும், தேனி தொகுதி எம்பியுமான ரவீந்திரநாத் குமார், எம்ஜிஆர், ஜெயலலிதா வாழ்க என்றும், வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என்றும் முழக்கமிட்டார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், ``வாழ்க அம்பேத்கர், பெரியாரியம்.. வளர்க ஜனநாயக சமத்துவம்” என்றார்.

இந்நிலையில்,  பாஜக எம்.பிகள் சிலர் பாரத் மாதா கி ஜே என முழக்கமிட்டனர்.

Loading...

இதனிடையே நெட்டிசன்கள் #தமிழ்வாழ்க என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Video:
First published: June 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...