ஒரே ஒரு டிக் டாக் தான் பண்ணேன்...டோட்டல்-டேமேஜ் ! வைரலாகும் சாஹல் வீடியோ

ஒரே ஒரு டிக் டாக் தான் பண்ணேன்...டோட்டல்-டேமேஜ் ! வைரலாகும் சாஹல் வீடியோ
டிக் டாக்
  • Share this:
சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் செய்த டிக்டாக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் கிரிக்கெட் மட்டும் அல்லாது டிக்டாக், ட்விட்டர் போன்றவற்றிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். கிரிக்கெட் விளையாட நேரம் ஒதுக்கியது போக அவ்வப்போது டிக்டாக் செய்து இணையத்திலும் பதிவிட்டு வருகின்றார். தற்போது அவர் பதிவிட்டுள்ள டிக்டாக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Off field performance on point 🕺 என பதிவிட்டுள்ள அந்த வீடியோவில் அவருடன் சேர்ந்து 3 இளைஞர்கள் டிக்டாக் செய்து உள்ளனர். அதில் ஒருவர் முகத்தை மறைத்த படி நடனமாடுகின்றார்.


இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆமா..ரோஹித் சர்மா எதுக்கு முகத்தை மறைத்திருக்கின்றார் என பதிவிட்டு வருகின்றனர்.பனங்காட்டு நரி எனும் நெட்டிசன் ஒரு படி மேலே போய் கவுண்டமணியின் பூ மிதித்தல் காமெடி பாடலை எடிட் செய்து போட்டுள்ளார்.மற்றொருவர் நடிகர் ரஜினிகாந்தின் மன்னன் திரைப்பட நகைச்சுவை டுயூன் ஒன்றை எடிட் செய்து கமெண்ட் செய்துள்ளார்.சாஹல் டிக்டாக் நடனத்திற்கு டி.ராஜேந்திரன் நடனத்தை போன்று உள்ளதாக ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்ஹிந்தி ரசிகர்களோ ஹிந்தி பாடலை எடிட் செய்து சாஹல் டிக்டாக் நடனத்திற்கு கமெண்ட் செய்துள்ளனர்.

 


Also see:


 
First published: February 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading