ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இந்தியாவில் முதல் முறையாகக் குகைக்குள் நடந்த இசைக் கச்சேரி - சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கு புது முயற்சி

இந்தியாவில் முதல் முறையாகக் குகைக்குள் நடந்த இசைக் கச்சேரி - சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கு புது முயற்சி

மேகாலயாவில் குகைக்குள் நடந்த இசை கச்சேரி

மேகாலயாவில் குகைக்குள் நடந்த இசை கச்சேரி

சோஹ்ராவில் அமைந்துள்ள அர்வா குகை, சுண்ணாம்புக் கற்கள் மற்றும் ஸ்டாலாக்டைட் அமைப்புகளால் ஆனது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

இந்தியாவின் பாறைகளின் தலைநகரான ஷில்லாங்கில் உள்ள குகையில் நாட்டுப் புற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழிச்சி உன்னதமான மற்றும் அற்புதமான படைப்பாற்றலை அளித்துள்ளது. வினோதமான மேடையில் நிகழ்த்தப்பட்ட இந்த இசை நிகழ்ச்சியை மக்கள் கண்டு மகிழ்ந்தனர். இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு பெரிய குகைக்குள் இந்த இசை கச்சேரி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சோஹ்ராவில்(sohra) அமைந்துள்ள புகழ்பெற்ற அர்வா (Arwah) குகையில், ஜூலை 16 ஆம் தேதி மாலையில் "KI சுர் நா புபோன்" (KI Sur Na Pubon) என்ற தலைப்பில் கிராஸ்ரூட்ஸ் மியூசிக்கல் ப்ராஜெக்ட்ஸ்யின் (Grassroots Musical Projects) இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சோஹ்ராவை சேர்ந்த இளம் நாட்டுப்புற பாடகர்கள், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த சிறப்புப் பாடல்களை அங்கு பாடினார்.

மேகாலயா சுற்றுலாப் பயணிகளின் இனிமையான பயணத்திற்கு, இசை சேர்ப்பதன் மூலம் சுற்றுலாவை சுவாரஸ்யமானதாக மாற்றவும், உள்ளூர் இயற்கை திறமைகளை வளர்ப்பதும் இந்த இசை நிகழ்ச்சியின் நோக்கமாக இருப்பதாக இசைக்குழு தெரிவித்துள்ளார்கள்

இந்த நிகழ்வை பற்றி சம்மர்சால்ட்டின் இசைக்குழு உறுப்பினர் கிட் ஷாங்ப்லியாங் கூறுகையில், இந்த நிகழ்ச்சி இளம் இசைக்கலைஞர்களின் பாடல்களை இசைக்கவும், ஆத்மார்த்தமாக நடிக்கும் வருங்கால கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும் இருப்பதாகவும் அதற்காக இதனில் நானும் கலந்துகொண்டு ஊக்கப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். மேலும் அவரும் அவரது மனைவியும் இணைந்து பாடல் பாடினார்கள்.

கிளீன் சோஹ்ரா (Clean Sohra) பிரச்சாரத்தின் தலைவர் ஆலன் வெஸ்ட் கார்கோங்கோர் (Alan West Kharkongor ) கூறியதாவது, குகை, நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் இயற்கை அன்னையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உலகுக்கு சொல்வதற்காகவே இதுபோன்ற ஒரு தனித்துவமான நிகழ்வை நடத்தினோம். சோஹ்ரா பகுதியின் இயற்கை அழகை கொண்டாடுவதற்கு இது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் இது போன்ற நோக்கத்தை செய்திட நாட்டுப்புற இசை தான் சிறந்த வழி என்றும் கூறினார்.

Also Read : பாம்பு கடித்தவுடன் பலூன் போல வீங்கிய முகம் - வைரலாகும் புகைப்படம்!

சோஹ்ராவில் அமைந்துள்ள அர்வா குகை, சுண்ணாம்புக் கற்கள் மற்றும் ஸ்டாலாக்டைட் அமைப்புகளால் ஆனது. அவை மில்லியன் கணக்கான ஆண்டுகள் பழமையானவையாகவும், இயற்கையாக செதுக்கப்பட்டவையாகவும் உள்ளது. இது பல குறுகிய பாதைகள், சிறு சிறு அறைகள் மற்றும் குகைக்குள் ஓடும் நீரோடைகளை கொண்டுள்ளது. அர்வா லும்ஷின்னா குகை(Arwah Lumshynna) என்பது லா ஷைன்னா (Arwah Lumshynna )வின் அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட ஒரு பெரிய குகையாகும்.

அர்வா குகை மேகாலயாவின் சிரபுஞ்சியில் உள்ள "பார்க்க வேண்டிய சுற்றுலா தளமாக "தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக, சொஹ்ரா, நீர்வீழ்ச்சிகள், வேர் பாலங்கள், குகை அமைப்புகள் மற்றும் அமைதியான சுற்றுச்சூழல் , மற்றும் அழகான காட்சிகள் போன்ற இயற்கையான அமைப்பை கொண்டுள்ளது.மிக முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் உலகின் ஒரே உயிருள்ள பாலமான "லிவிங் ரூட் பிரிட்ஜ்" (living root bridge) சோஹ்ராவில் உள்ளது மேலும் உலகெங்கிலும் உள்ள முக்கிய சுற்றுலா தலமாகவும் இது அமைந்துள்ளது.

மேகாலயாவில் வாழும் வேர் பாலங்களின் இயற்கை அதிசயம் மனதைக் கவரும் வகையில் இருப்பதோடு, இதன் அற்புதமான கட்டமைப்புகள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மிக நுணுக்கமாக வளர்ந்து வரும் மேகாலயாவின் மிகப்பெரிய ஈர்ப்புகளில் ஒன்றாகவும் உள்ளது. மேகாலயாவின் அடர்ந்த காடுகளின் வழியாக ஓடும் நீரோடைகளின் உயரமான கரைகளில் வேர் மூலம் பாலங்களை உருவாக்குவதில் தேர்ச்சி பெற்ற பயிற்சி கொண்ட காசி மற்றும் ஜெயின்டியா என்ற பழங்குடியினரால் இவை உருவாக்கப்படுகின்றன.

First published:

Tags: Caves, Environment, Meghalaya, Music