Home /News /trend /

உலகின் 2வது பணக்காரர் அதானியின் ஒருநாள் வருமானம் இத்தனை கோடியா?

உலகின் 2வது பணக்காரர் அதானியின் ஒருநாள் வருமானம் இத்தனை கோடியா?

கௌதம் அதானி

கௌதம் அதானி

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்கிற்கு, அடுத்தபடியாக, 150 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் அதானி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    உலக பணக்காரர்கள் வரிசையில் 2வது இடத்தில் உள்ள இந்தியாவின் கௌதம் அதானியின் ஒரு நாள் வருமானம் குறித்த தகவல் வெளியாகி மலைப்பை ஏற்படுத்தியுள்ளது.

    IIFL Wealth Hurun India Rich List 2022 பட்டியலின் படி, அதானி குழுமத்தின் தலைவரான கெளதம் அதானி, இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராக மாறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு அதானி நாளொன்றுக்கு 1,612 கோடி ரூபாய் வரையில் சம்பாதிப்பதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

    கடந்த ஜூலை மாதம் 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவர்கள் பட்டியலில் இடம்பிடித்ததுடன் உலகின் 4-வது பெரிய பணக்காரராக அதானி இருந்தார். தற்போது குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதானி, அமேசானின் ஜெஃப் பெசோஸ், எல்விஎம்எச் குழுமத் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோரை எல்லாம் பின்னுக்குத் தள்ளி உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

    60 வயதான அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி, ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் ரூ.10,94,400 கோடி சொத்துக்களுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    கடந்த ஓராண்டில், அதானியின் சொத்து இருமடங்காக அதிகரித்து 116 சதவீதமாக உயர்ந்து, ரூ.5,88,500 கோடி மதிப்புள்ள சொத்துக்களை சேர்த்துள்ளார். ஹுருன் இந்தியா தனது அறிக்கையில், கடந்த 5 வருடத்தில் அடுத்தடுத்து வர்த்தகக் கைப்பற்றல், வர்த்தக விரிவாக்கம் ஆகியவற்றின் மூலம் கௌதம் அதானி சொத்து மதிப்பு 1,440 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று கூறியுள்ளது.

    மேலும், அதானியின் பங்குச்சந்தை மதிப்புகள் கடந்த மாதம் முதலே நல்ல வளர்ச்சியை எட்டி வருகின்றன. அதேபோல் அதானி குழுமம் ஆற்றல் சார்ந்த புதிய முதலீடுகளை செய்து வருகின்றனர். இந்திய பங்குச்சந்தையில் இடம் பிடித்துள்ள அதானியின் 7 நிறுவனங்களின் மதிப்பு உயர்வே, அவருடைய சொத்துக்களின் மதிப்பை அதிகரிக்க உதவியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

    இதன் மூலமாக கடந்த ஐந்து ஆண்டுகளில், கௌதம் அதானி இரண்டாவது இடத்தில் இருந்து முன்னேறி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். இதேபோல் கெளதம் அதானியின் சகோதரரும் உலக பணக்காரர்கள் பட்டியலில் வளர்ச்சி அடைந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு வெளியான பட்டியலில் 8 வது இடத்தில் இருந்து கெளதம் அதானி, 5 ஆண்டுகளில் வேகமாக முன்னேறி முதலிடம் பிடித்துள்ளார். 2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது அவரது சொத்து 15.4 மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல் அவரது சகோதரர் வினோத் அதானி 49 வது இடத்திலிருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக ஹுருன் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்கிற்கு, அடுத்தபடியாக, 150 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் அதானி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். கடந்த வாரம், அதானி, அமேசானின் ஜெஃப் பெசோஸை முறியடித்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

    2022 ஆம் ஆண்டு காலாண்டு அறிக்கையின் படி, அதானி $70 பில்லியனுக்கும் மேலான சொத்துக்களை சேர்ந்துள்ளார். உலக பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வந்து கடந்த ஏப்ரல் மாதம் 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவர்கள் பட்டியலில் இடம் பிடித்திருந்தார்.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Adani, Billionaires

    அடுத்த செய்தி