Home /News /trend /

உலகின் முன்னணி விளம்பர நிறுவனத்தின் CEO-ஆன இந்தியாவின் தேவிகா புல்சந்தனி!

உலகின் முன்னணி விளம்பர நிறுவனத்தின் CEO-ஆன இந்தியாவின் தேவிகா புல்சந்தனி!

தேவிகா புல்சந்தனி

தேவிகா புல்சந்தனி

தேவிகா தனது படைப்பாற்றலின் சாம்பியன் ஆவார். அவர் ஆர்வம், நோக்கம் மற்றும் அவர் செய்யும் எல்லாவற்றிலும் வெற்றியை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துபவர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
இந்தியாவில் பிறந்த தேவிகா புல்சந்தனி இப்போது உலகளாவிய விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு நிறுவனமான Ogilvy இன் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்,

சர்வதேச அரங்கில் இந்தியாவில் பிறந்த பல CEO களுடன் இணைந்துள்ளார். கடந்த வாரம் பிரபல காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் லக்ஷ்மன் நரசிம்மனை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தது.

Ogilvy உலகளாவிய முன்னணி சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பு குழுவான WPP இன் ஒரு பகுதியாகும். புல்சந்தனி தனது புதிய பொறுப்பை ஏற்கும்போது WPP இன் செயற்குழுவில் சேருவார் என்று அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலக தற்கொலை தடுப்பு நாள் 2022: செயல் மூலம் நம்பிக்கையை உருவாக்கி தற்கொலைகளை தடுப்போம்

இளமை பருவம் :
தேவிகா புல்சந்தனி தனது குழந்தைப் பருவத்தையும் இளமைப் பருவத்தையும் இந்தியாவில் கழித்தார். தனது ஆரம்ப கல்வி நாட்களை பஞ்சாபின் அமிர்தசரஸில் கழித்தார். பின்னர் டெஹ்ராடூனில் உள்ள வெல்ஹாம் பெண்கள் பள்ளியில் படித்தார்.

அதன்பிறகு, மும்பையில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் உளவியலில் பட்டம் பெற்றார், பின்னர் அவர் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்திற்குச் சென்று தகவல்தொடர்புகளில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

அமிர்தசரஸில் பிறந்த புல்சந்தனி, McCann வட அமெரிக்காவின் தலைவர் உட்பட பல்வேறு தலைமைப் பாத்திரங்களில் 26 ஆண்டுகள் பணியாற்றினார். McCann வட அமெரிக்கா, மாஸ்டர்கார்டின் நீண்டகால பிரச்சாரத்திற்கு உந்து சக்தியாக இருந்தது.

அதே போல் 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்ட "உண்மையான பெயர்" இந்த துறையில் இப்படியான முதல் அம்சமாகும். இது திருநங்கைகள் மற்றும் பைனரி அல்லாதவர்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த பெயரை அவர்களது மாஸ்டர் கார்டு அட்டையில் பொறிக்க அதிகாரம் அளிக்கிறது.

முழுமையாக ESIMக்கு மாறிய ஆப்பிள் ஐபோன் 14... ESIM என்றால் என்ன..?

புல்சந்தானி தனது புதிய பணியில் 93 நாடுகளில் உள்ள 131 அலுவலகங்கள் மற்றும் அதன் விளம்பரம், மக்கள் தொடர்புகள், ஆலோசனை மற்றும் சுகாதாரப் பிரிவுகளில் படைப்பு நெட்வொர்க்கின் வணிகத்தின் அனைத்து அம்சங்களுக்கும் பொறுப்பாக இருப்பார்.

புகழ்:

நிறுவங்களின் வட்டத்தில் தேவ் என்று பிரபலமாக அறியப்படும் தேவிகா புல்சந்தனி, "கலாச்சார யுக்தியை" பிடிக்கும் கருத்துக்களுக்காக பிரபலமானவர். பெண்களின் சமத்துவம் மற்றும் துணிச்சலின் சின்னமான "அச்சமில்லாத பெண்ணை" என்ற பிரச்சாரத்தை தேவ் தொடங்கினார். கேன்ஸ் லயன்ஸ் இன்டர்நேஷனல் ஃபெஸ்டிவல் ஆஃப் கிரியேட்டிவிட்டி வரலாற்றில் மிகவும் விருது பெற்ற பிரச்சாரம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"தேவிகா தனது படைப்பாற்றலின் சாம்பியன் ஆவார். அவர் ஆர்வம், நோக்கம் மற்றும் அவர் செய்யும் எல்லாவற்றிலும் வெற்றியை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துபவர் என்று WPP இன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ரீட் கூறினார்.

பல்வேறு துறைகளில் உலகளாவிய பன்னாட்டு நிறுவனங்களில் தலைமைப் பங்கு வகிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிர்வாகிகளில் புல்சந்தனியும் சேர்ந்துள்ளார்
Published by:Ilakkiya GP
First published:

Tags: Women achievers

அடுத்த செய்தி