Home /News /trend /

சுதந்திர தின பெருவிழா - அருவி, கண், உணவு என பல இடங்களில் ஜொலிக்கிறது மூவர்ணம்.!

சுதந்திர தின பெருவிழா - அருவி, கண், உணவு என பல இடங்களில் ஜொலிக்கிறது மூவர்ணம்.!

independence special

independence special

Independence Day Celebration | தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாகவும், மக்களிடையே விழிப்புணர்வை தூண்டும் விதமாகவும் மேற்கொள்ளப்படும் சில விஷயங்கள் அனைவரது கவனங்களையும் ஈர்ப்பதாக அமைந்துள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இந்த ஆண்டில் சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, நாடெங்கிலும் பள்ளி, கல்லூரிகள், பொது இடங்கள் உள்ளிட்ட இடங்களில் தேசியக் கொடியை ஏந்தி பலரும் கொண்டாடி வருகின்றனர்.

தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாகவும், மக்களிடையே விழிப்புணர்வை தூண்டும் விதமாகவும் மேற்கொள்ளப்படும் சில விஷயங்கள் அனைவரது கவனங்களையும் ஈர்ப்பதாக அமைந்துள்ளன.

முன்னதாக, நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களின் முகப்புப் படத்தில் தேசியக் கொடியை வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி எண்ணற்ற மக்கள் தங்களின் புரொஃபைல் படமாக தேசியக் கொடியை வைத்துள்ளனர்.

கண்ணில் தேசியக் கொடியை வரைந்து கொண்ட தமிழர்

கோவை மாவட்டம், குனியாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த யுஎம்டி.ராஜா. இவர் மிகச் சிறிய அளவிலான ஓவியங்களை வரையும் கலைஞர் ஆவார். அந்த வகையில் 75ஆவது சுதந்திர தின விழாவுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று எண்ணிய அவர், தனது வலது கண் உள்ளே தேசியக் கொடியை ஓவியமாக வரைந்துள்ளார்.மிக நுண்ணிய, துணி போன்ற ஃபிலிம் ஒன்றை கண்ணில் வைத்து இந்த ஓவியத்தை ராஜா தீட்டியுள்ளார். அதே சமயம், கண்ணில் ஓவியம் வரைவது அலர்ஜியை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளதால், முன் அனுபவம் இல்லாதவர்கள் இதுபோல முயற்சி செய்ய வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Also Read : பாகுபலி ராஜமாதா போல் தனது குழந்தையை மக்களுக்கு காட்டிய கொரில்லா - வைரல் வீடியோ

மூவர்ணத்தில் உணவுகள்

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்று, தங்களின் வாடிக்கையாளர்களுக்கு மூவர்ணங்களில் உணவை பரிமாறி வருகிறது. நாம் விரும்பி சாப்பிடும் பாஸ்தா, சாண்ட்விட்ச், ஃபிரைடு ரைஸ் போன்றவை மட்டுமல்லாமல் சில பானங்களும் கூட இங்கு மூவர்ணங்களில் வழங்கப்படுகிறது.

Also Read : உலகின் கடைசி செல்ஃபி எப்படி இருக்கும்.? வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்

இந்த ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஏதேனும் ஒரு வித்தியசமான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இதனை செய்துள்ளதாக ரெஸ்டாரண்ட் உரிமையாளர் நிதிஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.டிவிட்டர் தளத்தில் வெளியாகியுள்ள இதுகுறித்த படங்கள் வைரல் ஆகி வருகின்றன. நெட்டிசன்கள் பலரும் இந்த முயற்சியை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

Also Read : 99 சதவீதம் பேர் தோல்வி... ஒரே ஒரு தீக்குச்சியை நகர்த்தி இந்த கணக்கை சமன் செய்ய முடியுமா.?

மூவர்ண அருவி

இன்ஸ்டாகிராம் தளத்தில் பயனாளர் ஒருவர் அருவியின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இளைஞர்கள் சிலர் அருவியின் மேலே ஏறி, கீழே கொட்டுகின்ற நீரில் மூவர்ணப் பொடிகளை கலந்துள்ளனர். இதனால், காவி, வெள்ளை, பச்சை என்று மூவர்ணத்தில் ஆர்பரித்துக் கொட்டும் அந்த அருவியை காண்பது கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது. 
View this post on Instagram

 

A post shared by R R MEDIA (@rr.meme.media)


இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஒவ்வொரு வைரல் பதிவுக்கும் கீழே நெட்டிசன்கள் பலரும் தங்களின் நாட்டுப் பற்றை வெளிப்படுத்தும் விதமாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

 
Published by:Selvi M
First published:

Tags: Independence day, Trending, Viral Video

அடுத்த செய்தி