Home /News /trend /

75ஆவது இந்திய சுதந்திர தினம்: சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

75ஆவது இந்திய சுதந்திர தினம்: சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

Google doodle: சுதந்திர தின இனிமையான நினைவுகளில் ஒன்றான காற்றாடிகளை பறக்கவிடும் பழங்கால பாரம்பரியம் இந்திய சுதந்திர தின விழாக்களில் ஒருங்கிணைந்ததாக உள்ளது. அதைக் குறிப்பிடும் விதமாகத்தான் இந்த கூகுள் டூடுல் ..

Google doodle: சுதந்திர தின இனிமையான நினைவுகளில் ஒன்றான காற்றாடிகளை பறக்கவிடும் பழங்கால பாரம்பரியம் இந்திய சுதந்திர தின விழாக்களில் ஒருங்கிணைந்ததாக உள்ளது. அதைக் குறிப்பிடும் விதமாகத்தான் இந்த கூகுள் டூடுல் ..

Google doodle: சுதந்திர தின இனிமையான நினைவுகளில் ஒன்றான காற்றாடிகளை பறக்கவிடும் பழங்கால பாரம்பரியம் இந்திய சுதந்திர தின விழாக்களில் ஒருங்கிணைந்ததாக உள்ளது. அதைக் குறிப்பிடும் விதமாகத்தான் இந்த கூகுள் டூடுல் ..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
இந்திய அரசாங்கம் சுதந்திர தினத்தையொட்டி  'ஆசாதி கா அம்ரித் மோகத்சவ்' கீழ், 'தேசம் முதலில், எப்போதும் முதலில்' என்ற கருப்பொருளில் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நாளைக் குறிக்கும் வகையில், 200 மில்லியன் மூவர்ணக் கொடிகளை ஏற்றுவதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பாரத பிரதமர் டெல்லி செங்கோட்டையில் நாட்டின் கொடியை ஏற்றி சுதந்திர தில விழாவை தொடங்கி வைத்துள்ளார்.

இந்நிலையில் உலக தேடல் பொறியின் அரசன் என அழைக்கப்படும் கூகுளை நிறுவனம் சார்பில் இந்திய சுதந்திரத்திற்கான சிறப்பு கூகுள் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த நீதி என்னும் கலைஞர் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட GIF வடிவிலான டூடுல் அது. சுதந்திர தினத்தை பட்டங்களை உயரமாக பறக்கவிட்டு, நம் சுதந்திர வெற்றியின் உயரத்தை காட்டி கொண்டாடும் பழக்கம் இந்தியாவில் உண்டு.

அதை பறைசாற்றும் விதத்தில் பட்டங்கள் செய்வது முதல் மக்கள் இணைந்து பட்டம் விட்டு பறக்கும் காட்சி வரை டூடுலில் அமைக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தில் பட்டங்களை பறக்கவிடுவது சுதந்திரத்தின் நீண்டகால அடையாளமாகும். இந்தியப் புரட்சியாளர்கள் ஒரு காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து முழக்கங்களுடன் பட்டம் பறக்கவிட்டனர். அப்போதிருந்து, பொழுதுபோக்கு மற்றும் போட்டித்திறன் கொண்ட காற்றாடியை பறக்க விடுவது சுதந்திர தினத்தின் மிகவும் பிரபலமான மரபுகளில் ஒன்றாக மாறியுள்ளது.



டூடுலைப் பற்றி கலைஞர் நீதி, ‘எங்களின் இனிமையான நினைவுகளில் ஒன்றான காற்றாடி பறக்கும் பழங்கால பாரம்பரியம் இந்திய சுதந்திர தின விழாக்களில் ஒருங்கிணைந்ததாக உள்ளது’ என்று கூறினார்.

மேலும், காற்றாடிகள் கலையின் வெளிப்பாடு ஆகும். அவை பல நவநாகரீக மையக்கருத்துகள் அல்லது சமூக செய்திகளைக் கொண்டுள்ளன. இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், நமது தேசிய நிறங்களை, அன்பின் செய்தியை சித்தரிக்கும் காற்றாடிகளை வரைந்துள்ளேன். அவை வானளாவிய கட்டிடங்கள், பறவைகள் போன்ற உயரத்தில் பறக்கின்றன, என்றார்

முந்நூறு ஆண்டுகள் ஆங்கிலேயர்களின் அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறைக்குப் பிறகு, காலனித்துவ ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக இந்நாள் குறிப்பிடப்படுகிறது . அடக்குமுறை ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் புரட்சியாளர்களின் இடைவிடாத முயற்சிகளுக்குப் பிறகு சுதந்திர தேசம் காற்றைக் கிழித்துக்கொண்டு பறக்கும் பட்டதைப்போல் சுதந்திரமாக வானின் உச்சிக்கு சென்றது. அதை நினைவுகூரவே பட்டங்கள் விட்டு மக்கள் கொண்டாடுகின்றனர்.

டூடுல் மட்டுமின்றி திரையில் சொடுக்கினால் 75 என்று பெயரிட்ட பட்டங்கள் பறக்குமாறு இவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Google Doodle, Independence day

அடுத்த செய்தி