• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • 'நீ செல்போன் யூஸ் பண்ண கூடாது' குழந்தையிடம் சண்டையிடும் குரங்கு - இணையத்தில் வைரலாகும் வீடியோ

'நீ செல்போன் யூஸ் பண்ண கூடாது' குழந்தையிடம் சண்டையிடும் குரங்கு - இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Viral Video : மனித வாழ்வில் செல்போன் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டதாக நினைத்து அதில் பலரும் மூழ்கி வருகின்றனர். தற்போது இணையத்தில் குரங்கு ஒன்று மனிதர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் குழந்தையின் கையில் இருந்து செல்போனை புடுங்கும் செயல் வைரலாகி வருகின்றது.

  • Share this:
    குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரது கைகளிலும் மொபைல் போன் ஆக்கிரமித்துள்ளது. தாலாட்டி தூங்க வைத்த நாட்கள் கடந்து செல்போனை கையில் கொடுத்து தூங்க வைக்கும் பழக்கம் பலரது வீடுகளிலும் மாறிவருகின்றது.

    செல்போனை பயன்படுத்தும் அனைவருக்கும் நிச்சயமாக நோய்களால் தாக்கப்படுவர் என்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக, செல்போன் வெளியேற்றும் மின்காந்த அலைகள் ரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய்கள், வலிப்பு நோய் மற்றும் மூளைப் பாதிப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். செல்போன் கோபுரங்கள் மூலம் பரவும் மின்காந்த அலைகள் சுற்றுச் சூழலுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பறவை இனங்கள், சிறு பூச்சிகள், வண்டுகள் போன்றவை இந்த மின் காந்த அலைகளால் தாக்கப்படுகின்றன. செல்போன் வரவுக்குப் பிறகு ஏராளமான நேரம் விரயமாக்கப்படுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

    செல்போனை அதிகம் பயன்படுத்துவதால் குழந்தைகளின் படிப்பு பாழாகின்றது. இளைஞர்கள், மாணவர்கள் தங்களின் பொன்னான நேரத்தை செல்போனில் பேசி , பல ஆப்களில் மணிக்கணக்கில் மூழ்கி தற்போது வாட்ஸ் ஆப்பில் அதிகம் பேசுகின்றோம். உறவுகளை நேரில் கண்டால் ஒதுங்குகின்றோம்.

    இவ்விதம் மனித வாழ்வில் செல்போன் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டதாக நினைத்து அதில் பலரும் மூழ்கி வருகின்றனர். தற்போது இணையத்தில் குரங்கு ஒன்று மனிதர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் குழந்தையின் கையில் இருந்து செல்போனை புடுங்கும் செயல் வைரலாகி வருகின்றது.

     




     

     

     

    அந்த வீடியோவில் குழந்தை ஒன்று தனது கைகளில் செல்போனை பிடித்த படி உட்கார்ந்து விளையாடுகிறது. இதனை பார்த்த குரங்கு செல்போனை கையில் வாங்கி இது என்ன உன் கையில் இது எதற்கு என்பன போல் வாங்கி பார்க்கின்றது. இந்த வீடியோ இணையவாசிகள் பலரையும் இந்த வீடியோ சிந்திக்க வைத்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: