உலகில் இருக்கும் ஒவ்வொரு நாடும் அதன் அன்றாட செயல்பாடுகள் மற்றும் அங்கு நிகழும் பல்வேறு குற்றங்கள் உள்ளிட்டவற்றுக்கென்று என சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கொண்டிருக்கின்றன. நம் நாட்டில் பெரிய தவறுகளுக்கு கூட தண்டனை கிடைக்க மிகவும் தாமதமாகும். ஆனால் பல நாடுகளில் சிறிய மற்றும் பெரிய தவறுகள் எதுவாக இருந்தாலும் விரைந்து விசாரிக்கப்பட்டு அதற்குரிய தண்டனைகள் உடனுக்குடன் வழங்கப்பட்டு விடும். அதிலும் பல நாடுகளில் ஒரு சிறிய தவறுக்கு கூட அங்கு பின்பற்றப்படும் சட்டங்களின்படி கடும் தண்டனைகள் வழங்கப்படும்.
வெளிநாட்டினருக்கு மிகவும் விருப்பமான சுற்றுலா நாடாக இருந்து வருகிறது சிங்கப்பூர். தென்கிழக்கு ஆசியாவின் நடுவில் அமைந்திருக்கும் நாடான சிங்கப்பூரின் மூலோபாய இருப்பிடம் மற்றும் பிரபலமான ஏர்போட் உலகம் முழுவதிலுமிருந்து பயணிகள் வந்து செல்ல எளிதான இடமாக உள்ளது. அதிகளவிலான சுற்றுலா பயணிகளின் வருகையை பெரும் நாடுகள் பட்டியலில், சிங்கப்பூர் உலகின் 26-வது இடத்தில் உள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சர்வதேச சுற்றுலா பயணிகள் வருகையில் சிங்கப்பூர் 8-வது இடத்தில் இருக்கிறது.
எனவே சிங்கப்பூரை பொறுத்த வரை பொது இடங்களை தூய்மையாக வைத்திருப்பது அந்நாட்டு அரசின் முன்னுரிமைகளில் ஒன்றாகும். அந்நாட்டில் இருக்கும் பொதுக் கழிப்பறைகளில் தூய்மையை உறுதி செய்வதற்காக, சிங்கப்பூரில் பொது கழிப்பறையைப் பயன்படுத்திய பின் அதை முறையாக சுத்தம் (ஃப்ளஷ்) செய்து விட்டு வெளியே வராதவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படுகிறது. தூய்மை குறித்த பாடத்தை கற்பிக்க சில நேரங்களில் அத்தகையவர்களுக்கு கடும் தண்டனையும் வழங்கப்படுகிறது.
தூய்மை நிறைந்த வண்ணமயமான நாடாக அறியப்படும் சிங்கப்பூரில் பொது கழிவறையை பயன்படுத்தி விட்டு அதை சரியாக ஃப்ளஷ் செய்யாமல் வந்து விட்டால் அவர்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.8,000 அபராதம் விதிக்கப்படும். ஒருவேளை இந்த தவறை செய்யும் ஒருவர் அதற்கான அபராதத்தை செலுத்த தவறினால் ஜெயில் தண்டனையும் விதிக்கப்படலாம். எனவே தங்கள் நாட்டிற்கு வரும் டூரிஸ்ட்கள் அனைவரும் "ஃப்ளஷ் செய்ய மறக்க வேண்டாம்" என்று சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தி உள்ளது.
Also read... பள்ளிக்கு செல்லும் சிறுமியை ஃபாலோ செய்த ஆடு - வைரலாகும் வீடியோ!
இந்த கடும் நடவடிக்கைகளுக்கு காரணம், ஒவ்வொருவரும் தூய்மை என்ற விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே என்றும் கூறியுள்ளது. அதே போல சிங்கப்பூரில் பொது இடத்தில் எச்சில் துப்பினாலோ, பாதுகாப்பற்ற முறையில் வைஃபை இணைப்பை பயன்படுத்தினாலோ அல்லது நிர்வாணமாக சுற்றி திரிந்தாலோ அபராதம் விதிக்கப்படும். எனவே இங்கு வரும் டூரிஸ்ட்டுகள் சிக்கலை தவிர்க்க, சில நடவடிக்கைகள் தொடர்பான தங்கள் நாட்டின் விதிகள் மற்றும் சட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் அந்நாட்டு அரசு கூறி இருக்கிறது.
சிங்கப்பூரில் சூயிங் கம் விற்பனை செய்வது சட்டவிரோதமானது. சில மருத்துவ குணங்களைக் கொண்ட சூயிங் கம்கள் மெடிக்கல் பிரிஸ்கிரிப்ஷன் படி விற்கப்படலாம். ஒருவரை எரிச்சலூட்டும் வகையில் இசை கருவியை பயன்படுத்துவது, இந்நாட்டில் சட்டவிரோதமானது. பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, மீந்த உணவுகளை பறவைகளுக்காக வெளியே வைப்பது உள்ளிட்டவை சிங்கப்பூரில் அபாரதத்திற்குரிய செயல் ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Singapore