முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / பெட்டி, பெட்டியாய் எலுமிச்சை பழம்.. புதுமண தம்பதிக்கு கிடைத்த வித்தியாசமான கிப்ட்..

பெட்டி, பெட்டியாய் எலுமிச்சை பழம்.. புதுமண தம்பதிக்கு கிடைத்த வித்தியாசமான கிப்ட்..

காட்சி படம்

காட்சி படம்

குஜராத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மாப்பிள்ளையின் உறவினர்கள் அவருக்கு கல்யாண பரிசாக பெட்டி, பெட்டியாக எலுமிச்சை பழங்களை பரிசாக கொடுத்துள்ளனர்.

கொரோனா காலத்தில் பல வகையான திருமணங்களை பார்த்திருப்போம். ஸ்கைப் மூலம் திருமணம், மெட்டாவெர்ஸில் ரிசப்ஷன், பிளாக் செயின் மூலம் திருமணம், கூகுள் மீட் கல்யாணம் என ஏராளமான வித்தியாசமான திருமணங்கள் அரங்கேறின. திருமணம் என்றாலே இசை, நடனம், உறவுகளின் நலம் விசாரிப்பு, கலகலப்பு என அனைத்து கலந்த கொண்டாட்டமான நிகழ்ச்சியாக இருக்கும்.

அதுவும் இந்த கோலாகல கொண்டாட்டத்தில் வேடிக்கையான மற்றும் விநோதமான பரிசு பொருட்களும் இணைந்துவிட்டால் கேலி, கிண்டல் என கொண்டாட்டம் டபுள் டமாக்காவாக மாறிவிடும். குறிப்பாக திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியின் போது புதுமண தம்பதிகளுக்கு அவர்களது நண்பர்கள் காஸ்ட்லியானது முதல் வித்தியாசமானது வரை பல வகையான கிப்ட்களை கொடுத்து அசத்துவார்கள். தற்போதைய இளம் தலைமுறையினர் விலைவாசி ஏற்றத்தை கிண்டல் செய்யும் வகையிலும், புதுமண தம்பதிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வகையிலும் பெட்ரோல், சமையல் எண்ணெய், வெங்காயம், தக்காளி, கேஸ் சிலிண்டர் ஆகியவற்றை பரிசாக வழங்கி வருகின்றனர்.

தற்போது அந்த பரிசு பட்டியலில் எலுமிச்சை பழமும் இணைந்துள்ளது. ஆம், குஜராத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மாப்பிள்ளையின் உறவினர்கள் அவருக்கு கல்யாண பரிசாக பெட்டி, பெட்டியாக எலுமிச்சை பழங்களை பரிசாக கொடுத்துள்ளனர்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் தோராஜி நகரில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமகனுக்கு அவரது உறவினர்களும், நண்பர்களும் போட்டி போட்டுக் கொண்டு எலுமிச்சை பழங்களை பரிசாக கொடுத்துள்ளனர். இதற்கான காரணம் குறித்து மணமகனின் உறவினரான தினேஷ் என்பவர் ANIக்கு அளித்த பேட்டியில், “தற்போது எலுமிச்சை பழத்தின் விலை நாடு முழுவதும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.

also read : ரசாயனம் எதுவும் இன்றி வருட கணக்கில் பாதுகாத்து வைக்கப்படும் திராட்சைகள் - எப்படி சாத்தியம்!

தற்போது கோடை காலம் என்பதால் எலுமிச்சை பழம் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் எனவே அதனை புதுமண தம்பதிக்கு பரிசாக கொடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார். இந்த திருமணத்தில் எலுமிச்சை பழத்தை கிப்ட்டாக கொடுத்தது மட்டுமல்ல அதனை எப்படி வந்து கொடுத்தார்கள் என்பதும் இணையத்தில் வைரலாக காரணமாக அமைந்துள்ளது. ஆமாங்க, எலுமிச்சை பழத்தை மணமகனுக்கு பரிசாக கொடுத்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் மஞ்சள் நிற உடையில் வந்துள்ளது மற்றொரு வேடிக்கையான விஷயமாக அமைந்துள்ளது.

also read : கன்றுக்குட்டியின் காலை பிடித்த மலைப்பாம்பு.. அடுத்து நடந்தது என்ன?

இந்த ஆண்டு பல மாநிலங்களில் எலுமிச்சையின் விலை உயர்ந்துள்ளது, ஒரு எலுமிச்சையின் விலை 8 முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பருவமழை காரணமாக எலுமிச்சை சாகுபடியில் பின்னடைவு ஏற்பட்டதே எலுமிச்சையின் விலை உயர்வுக்குக் காரணம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கோடை காலத்தில் எலுமிச்சைக்கு அதிக தேவை இருப்பதால், அவற்றின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த மாதத்தின் ஆரம்பத்தில், பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயைத் தாண்டியபோது, ​​தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் கிராமத்தில் புதுமணத் தம்பதியருக்கு நண்பர்கள் லிட்டர் கணக்கில் பெட்ரோல் மற்றும் டீசலை பரிசாக அளித்தது இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Viral