மனிதர்களுக்கும் நாய்களுக்கும் எப்பொழுதுமே நெருங்கிய தொடர்பு உள்ளது. மனிதர்களின் மிகச் சிறந்த நண்பன் நாய் மட்டுமில்லாமல் மனிதர்களின் உணர்வுகளை சரியாக புரிந்து கொள்ளும் திறன் நாய்களுக்கு உள்ளது. நாய்களை செல்லப்பிராணியாக, குழந்தையாக, அதன் மீது உயிரையே வைத்து வளர்த்து வரும் நபர்கள் பலர் இருக்கிறார்கள். தங்கள் குழந்தையைப் போல நாயை பார்த்து பார்த்து வளர்க்கும் பலர் இருக்கிறார்கள்.
நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடுவது, ஆடைகள் அணிவித்து அழகு பார்ப்பது என்று வகையில் நாய்களை தங்கள் குடும்பத்தில் ஒருவராக வளர்த்து வருகின்றனர். அதே போல, நாய்கள் தங்களுடைய எஜமானரின் வாழ்க்கையை காப்பாற்றிய பல செய்திகள் வெளியாகி இருக்கின்றன. மனிதர்கள் இறந்து போகும் வருத்தத்தை விட, நாய்கள் இறக்கும் வருத்தம் மிகவும் பெரியது, தாங்கிக் கொள்ள முடியாதது. ஆனால், அதிர்ஷ்டவசமாக தீவிரமான பாதிக்கப்பட்ட ஒரு நாய் தனது எஜமானரால் காப்பாற்றப்பட்டது.
சமீபத்தில் பாம்பு கடித்ததால் ஒரு நாயின் முகம் பலூன் போல வீங்கி இருக்கும் ஒரு புகைப்படம் வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சீனாவில் இருக்கும் அன்ஹுய் என்ற ஒரு நகரில் வசித்து வரும் ஒரு நபர் ஸ்யுபி என்ற நாயை வளர்த்து வருகிறார்.திடீரென்று ஸ்யுபியின் முகம் பலூன்போல வீங்கி காணப்பட்டது. முகம் ஏன் இப்படி வீங்கி இருக்கிறது என்று அவரால் கண்டறிய முடியவில்லை.
பொதுவாக நாம் ஏதாவது உணவு சாப்பிட்டு அலர்ஜி ஆகும் போது முகம் வீங்கும். உதாரணமாக மீன் உணவுகள் சிலருக்கு அலர்ஜி ஆகி உடல் முழுவதும் வீக்கத்தை ஏற்படுத்தும். அதே போல நாய்களுக்கும் உணவு சம்பந்தப்பட்ட அலர்ஜி ஏற்படும். ஆனால் அது போல இல்லாமல், முகம் முழுவதும் பலூன் மாதிரி வீங்கி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர், தன்னுடைய செல்ல நாயின் புகைப்படம் மற்றும் வீடியோவை உடனடியாக கால்நடை மருத்துவருக்கும், சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்.
தன்னுடைய நாயின் முகத்தைப் பார்ப்பதற்கு பயமாக கவலையாக இருக்கிறது என்றும், நாய் வீட்டுக்குள் வர மறுக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதே நேரத்தில் கால்நடை மருத்துவரிடம் இதைப்பற்றி அவர் உடனடியாக பகிர்ந்து கொண்டார்.
அந்த வீடியோவை பார்க்கும் பொழுது நாயின் முகம் மனிதர்களின் தலையை விட இரண்டு மடங்கு பெரிதாக இருப்பதை காண முடிகிறது. மருத்துவர் ஸ்யுபியை ஒரு விஷப்பாம்பு கடித்து இருப்பதாக உறுதி செய்தார். இந்த விஷப் பாம்பு கடித்தத்தின் விளைவுதான் நாயின் முகம் அவ்வளவு பெரியதாக வீங்கி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். அந்த நாய் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விஷமுறிவு நீக்கும் மருந்து செலுத்தப்பட்டிருக்கிறது. உடலில் இருந்த விஷம் கொஞ்சம் கொஞ்சமாக இறங்க, முக வீக்கமும் குறையத் துவங்கி இருக்கிறது. ஸ்யுபியின் முக வீக்கம் குறைந்து வருவதாகவும், உடல் நலம் தேறிவிட்டதாகவும், அப்டேட் செய்துள்ளார்.
ஸ்யுபியை வளர்த்து வந்தவர் விரைவாக நடவடிக்கை எடுத்ததால் நாய் இப்பொழுது உயிருடன் இருக்கிறது, இது மிகவும் பாராட்டுக்குரியது என்று பலரும் பாராட்டி வருகின்றனர். அதேபோல ஒரு சிலர் நான் எவ்ளோ வலி மற்றும் வேதனை அனுபவித்து இருக்கும் என்று கூறி நாய் விரைவில் சீக்கிரமாக குணமடைய வேண்டும் என்று பிராத்தனை செய்வதாகவும் ஒருவர் தெரிவித்திருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.