ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

400 விருந்தினர்கள் முன்னிலையில் நாய்களுக்கு நடந்த கோலாகல திருமணம்.. ஏன் தெரியுமா?

400 விருந்தினர்கள் முன்னிலையில் நாய்களுக்கு நடந்த கோலாகல திருமணம்.. ஏன் தெரியுமா?

கோலாகலமாக நடந்த நாய்களின் திருமணம்

கோலாகலமாக நடந்த நாய்களின் திருமணம்

பீகாரில் இரண்டு நாய்களுக்கு ஊரே வியக்கும் வகையில் நடந்த விசித்திர திருமணம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

திருமண சீசன் களைக்கட்டி வருகிறது. உங்களில் பலர் நண்பர் அல்லது உறவினரின் திருமணங்களுக்கு செல்ல வேண்டி இருக்கும். ஆனால், இந்தியாவில் இதுவரை கேள்விப்பட்டிராத, பார்த்திராத வகையில், பீகாரில் ஒரு விசித்திரமான திருமணம் நடந்துள்ளது. திருமணத்தில் 400 விருந்தினர்கள், டிஜேக்கள், உணவு என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தடபுடலாக நடந்துள்ளது. இதில் என்ன ஆச்சர்யம் இந்திய திருமணங்களில் இதைவிட மிகப்பெரிய பிரம்மாண்டம் எல்லாம் நடந்திருக்கிறதே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் நாங்கள் சொன்ன கல்யாணம் நடந்தது மனிதர்களுக்கு அல்ல, இரண்டு நாய்களுக்கு என்பதில் தான் டுவிஸ்ட்டே.

பீகார் மாநிலம் மோதிஹாரியின் மஜுராஹா கிராமத்தில் இரண்டு நாய்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணம் முழு சடங்குகளுடன் நடந்துள்ளது. திருமணத்திற்கு முன்பு, இருவருக்கும் கல்லு மற்றும் பாசந்தி எனப் பெயரிட்டு, கல்லுக்கு ஆண் போலவும் பாசந்தி மணப்பெண் போலவும் திருமண உடைகள் மற்றும் அலங்காரங்களை செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி ‘சும்மா தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா?’ என்கிற அளவுக்கு பேண்ட் வாத்தியங்கள், டிஜே நடனம், ஊர்வலம் என ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டமாக நடந்துள்ளது. திருமணம் முடிந்த கையோடு சுமார் 400 விருந்தினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டுள்ளது. அத்தோடு புதுமண ஜோடிக்கு கிராம மக்கள் பரிசுகளையும் கொடுத்து அசத்தியுள்ளனர்.

நாயின் உரிமையாளர் நரேஷ் சாஹ்னி மற்றும் பெண் நாயின் எஜமானி சவிதா தேவி இருவருக்கும் திருமணத்திற்கு முன்பே பெயர் சூட்டினர். இதையடுத்து கல்லுவுக்கும் பாசந்திக்கும் திருமணம் நடந்தது. சவிதா தேவி தன் குழந்தைகளுக்காக வேண்டுக்கொண்டதற்காக, கல்லுக்கும் பாசந்திக்கும் திருமணம் நடந்தி வைத்துள்ளார்.

பொதுவாக இந்தியாவில் இந்துக்களின் நம்பிக்கையின் படி நாய்கள் பைரவரின் வடிவமாக கருதுகின்றனர். இப்படி நாய்களுக்கு திருமணம் செய்து வைப்பது நினைத்து காரியம் நிறைவேறவும், அனைத்து விதமான பாவங்களில் இருந்து விடுபடவும் வழி என்று அப்பகுதி மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. எனவே தான் இரண்டு நாய்களையும் வளர்த்து, சரியான பருவத்தில் அவற்றிற்கு பெயர் சூட்டி, இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மழைக்காக தவளை, கழுதை போன்ற விலங்குகளுக்கு திருமணம் நடத்தி வைப்பார்கள், ஆனால் பாவங்கள், தோஷங்கள் நீங்க வேண்டும் என்பதற்காக நாய்களுக்கு இப்படி தடபுடலாக திருமணம் நடைபெற்றது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு சுய திருமணங்கள் மற்றும் ரோபோக்கள் மற்றும் பேய்கள் சம்பந்தப்பட்ட திருமணங்கள் போன்ற விசித்திரமான திருமணங்களும் நடந்துள்ளது. 2019 இல், இங்கிலாந்தில் ஒரு பெண் தனது நாயை தொலைக்காட்சியில் லைவ் டெலிகாஸ்ட் செய்து திருமணம் செய்து கொண்டார்.

Also Read..உருவத்தை கண்டு எடை போடாதே! சக்திவாய்ந்த எறும்புகளை பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்...

ஆண்களை விட தனது கோல்டன் ரெட்ரீவர் தன்னிடம் அன்பாக இருந்தது பிடித்திருந்ததால் அதையே திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்ததாக தெரிவித்திருந்தார். எல்லாரும் செல்லப்பிராணியாக நாயை வளர்க்கிறார்கள். ஆனால் அதனை யாரும் வாழ்க்கை துணையாக ஏற்பது கிடையாது. அப்படியிருக்க இந்த பெண் செய்த செயல் இணையத்தில் கலவையான விமர்சனங்களுடன் வைரலானது.

First published:

Tags: Bihar, Dog, Marriage, Viral