வீடியோ எடுத்தபோது விபரீதம்.. காண்டாமிருகத்தின் இருப்பிடத்தில் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய Tiktok இளைஞர்..

வீடியோ எடுத்தபோது விபரீதம்.. காண்டாமிருகத்தின் இருப்பிடத்தில் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய Tiktok இளைஞர்..

மாதிரி படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
சோசியல் மீடியாக்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ கிளிப்பில், நல்வாய்ப்பாக காண்டாமிருகத்தின் இருப்பிடத்திற்கே சென்று உயிர் தப்பிய இளைஞர்தான் இப்போது இணையதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறார். 

பொதுவாக காட்டு விலங்குகளிடம் நாம் ஜாக்கிரதையாக இருப்பது முக்கியம். நம் அஜாக்கிரதை நம் உயிரையே பறிக்கும், ஆனால் நல்வாய்ப்பு இருந்தால் தப்பித்துக்கொள்ளலாம்.  சிங்கப்பூரை சேர்ந்த நபர் - வீடியோ ஷாரிங் தளத்தில் (video sharing platform) தனது பின்தொடர்பவர்களைக் கவர விரும்பிய ஒரு டிக்டாக் (Tiktok) வாசி,  இவர் சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலைக்கு சென்று அங்குள்ள விலங்குகளின் இடத்தில் போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்து அதை இணையவெளியில் பகிர்ந்து லைக்ஸ்களை பெற நினைத்தார். விலங்குகள் இருக்கும் கூண்டிற்கு வெளியே இருந்து வீடியோக்களை எடுத்த அந்த நபர், அடுத்ததாக காண்டாமிருகங்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் செல்லும் போது தவறி காண்டாமிருகத்தின் இடத்திற்குள் விழுந்து விட்டார்.

நல்ல வேலை நல்வாய்ப்பாக, அந்த நபர் உயிர் தப்பினார். அவருக்கு பின்னால் இருந்த நான்கு மாபெரும் காண்டாமிருகங்கள் அவரை கவனிக்கவில்லை.  ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸில் (Straits Times) ஒரு அறிக்கையின்படி , மேற்கண்ட நிகழ்வின் காரணமாக வைல்ட்லைப் ரிசர்வ் சிங்கப்பூர் (Wildlife Reserves Singapore (WRS) போலீசில் புகார் அளித்துள்ளது, இது குறித்து விசாரணையும் நடந்து வருகிறது. 

WRS என்பது ஒரு சுய நிதியுதவி அமைப்பாகும், இது நாட்டின் உயிரியல் பூங்காக்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை நிர்வகிக்கிறது. வைல்ட்லைப் ரிசர்வ் சிங்கப்பூர், இந்த நிகழ்விற்க்கான தனது அதிருப்தியை இன்ஸ்டாகிராம் பதிவின் (Instagram post) மூலம் தெரிவித்துள்ளது. போட்டோ மற்றும் வீடியோ பகிர்வு தளத்தின் பகுதியை கண்டா நிர்வாகம், " இது சமூக பொறுப்பற்ற, மிகவும் ஆபத்தான மற்றும் வனவிலங்குகளுக்கு அவமரியாதை செய்யும் நோக்கில் செய்யப்பட்ட மோசமான செயல்" என்றது. 

மேலும் WRS பார்வையாளர்களிடம், இந்த செயல் அந்த இளைஞனுக்கு ஆபத்தானது மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் இதுபோன்ற செயல்களை செய்யவேண்டாம் என்று கெஞ்சி கேட்டது. அந்த வீடியோ கிளிப் முதலில் டேர்டெவிலின் டிக்டோக் கணக்கில் (daredevil’s TikTok account) அப்லோடு செய்யப்பட்டது. எவ்வாறாயினும், வீடியோ இடுகை பின்னர் தளத்திலிருந்து அகற்றப்பட்டதாகத் தெரிகிறது. மிருகக்காட்சிசாலையின், அறிக்கையின்படி, கடந்த காலத்திலும் இதுபோன்ற ஒரு மோசமான நிகழ்வைக் தாங்கள் கண்டதாக நிர்வாகம் கூறியது. 

2018ம் ஆண்டில், மலேசிய ஒப்பந்த மிருகக்காட்சிசாலையின் தொழிலாளி (Malaysian contract Zoo worker) மூன்று வெள்ளை புலிகளால் மோசமாக தாக்கப்பட்டார், அவர் துரதிர்ஷ்டவசமாக புலிகளின் மரண வலையில் இருந்து தப்ப முடியவில்லை.அந்த மனிதன், தவறாக புலிகளுக்கும் பார்வையாளர்களுக்குமான வேலிக்கு அப்பாற் குதித்தாதால் இத்தகைய மோசமான நிகழ்வு நடந்ததாக நிர்வாகம் கூறியது. அவர் புலிகளை நோக்கிச் சென்றதால் கொல்லப்பட்டார் என்றும் நிர்வாகம் கூறியது. 

இந்த பயங்கர வெள்ளை புலிகளின் தாக்குதலை மிருகக்காட்சிசாலையின் பார்வை கேலரியில் இருந்து 16 வயது மாணவர் முகமது கைருல் நிஜாம் ஜைனல் என்பவர் விடியோவை எடுத்ததாக asiaone.com தெரிவித்துள்ளது. அந்த ஒப்பந்தத் தொழிலாளி புலிகளின் இடத்திற்குள் சென்ற பின்னர் புலிகள் மிகுந்த ஆர்வமாக இருந்ததை அந்த நான்கு நிமிட வீடியோ காட்சிகள் காண்பித்தன. பாதிக்கப்பட்டவருக்கு மண்டை ஓடு, கழுத்து மற்றும் விலா எலும்புகள் என பல இடத்தில் முறிவுகள் ஏற்பட்டது. 

Also read... கொரோனா 2.0: இங்கிலாந்தில் சிக்கித் தவிக்கும் ஓட்டுநர்களுக்கு உணவளிக்கும் சீக்கியர்கள்

இதை தவிர மேலிருந்து கால் வரை 90 வெளிப்புற காயங்கள் அவருக்கு இருந்ததாக அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது. இறந்தவரின் குடும்பத்திற்கு தொழிலாளர்களுக்கான இழப்பீடு வழங்க மிருகக்காட்சிசாலையில் எந்த சட்டபூர்வமான கடமையும், விதியும் இல்லை என்றது அந்த நிர்வாகம். இத்தகைய துணிச்சலான செயல்கள் தங்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து அவர்களை நிரந்தரமாகப் பிரித்து அவர்கள் தங்கள் வாழ்க்கையை இழக்கின்றன.

மேலும், மிருகக்காட்சிசாலைகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் மனிதக்கொலைகள் காரணமாக சட்டங்கள் வலுவாக்கப்பட்டும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்துதான் வருகின்றது. இயற்கையான வாழ்விடத்தை இழந்த காட்டு விலங்குகளின் நிலை மோசமாகி வருகின்றது. மனிதர்கள் காட்டு விலங்குகளின் எல்லைக்குள் செல்லும்போது அவைகள் உண்மையில் ஒருவித அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றன.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

சிறந்த கதைகள்