ஆசியாவிலேயே முதல் முறையாக ஸ்னிஃபர் நாய்களுக்காக கல்லறை அமைத்த கேரள போலீஸ்!

ஸ்னிஃபர் நாய்

சமீபத்தில் கேரள மாநில காவல்துறைத் தலைவர் டிஜிபி லோக்நாத் பெஹெரா அவர்களால் இவை திறந்து வைக்கப்பட்டன.

  • Share this:
நாய்கள் எப்போதுமே மனிதனின் உற்ற நண்பர்களாக இருந்து வருகின்றன. வீட்டில் செல்ல பிராணிகளாக வளர்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கண்டறியவும் காவல்துறைக்கு பேருதவி செய்து வருகின்றன. தங்களது அதீத மோப்ப சக்தி மூலம் காவல்துறை மற்றும் ராணுவத்தில் பயிற்சி பெற்ற ஸ்னிஃபர் நாய்கள் (sniffer dogs) பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தன் மோப்ப சக்தி மூலம் வெடிபொருட்களை கண்டறிவது, சட்டவிரோத மருந்துகள், தடை செய்யப்பட்ட மின்னணுவியல் பொருட்களை கண்டறிவது, குற்றம் நடைபெற்றுள்ள இடங்களில் இருந்து தப்பியோடும் குற்றவாளிகள் சென்ற தடம் கண்டறிவது உள்ளிட்ட பல வேலைகளை செய்து அதிகாரிகளுக்கு உதவியாக இருக்கின்றன.

ஸ்னிஃபர் நாய்களால் அதிகம் பயன்படுத்தப்படும் உணர்வு வாசனை. இந்த நாய்களின் வாசனை உணர்வு மற்றும் மோப்ப சக்தி சராசரி நாயை விட பல் மடங்கு மேம்பட்டது. இந்நிலையில் காவல்துறைக்கு வலதுகரமாக திகழும் நாய்களை கவுரவிக்கும் வகையில் ஸ்னிஃபர் நாய்களுக்கான கல்லறை மற்றும் நினைவுச்சின்னத்தை கேரள மாநில காவல்துறை திறந்துள்ளது. சமீபத்தில் கேரள மாநில காவல்துறைத் தலைவர் டிஜிபி லோக்நாத் பெஹெரா அவர்களால் இவை திறந்து வைக்கப்பட்டன. நாய்களின் கல்லறைகளில் டி.ஜி.பி பெஹெரா மலர் அஞ்சலி செலுத்தினார். திருச்சூரில் கேரள போலீஸ் அகாடமி வளாகத்தில் கட்டப்பட்ட நினைவு கட்டமைப்பையும் (memorial structure) அவர் வெளியிட்டார்.

Also Read : ஒன்றரை வயது குழந்தையை சுமந்தபடி ஆறுகளை கடந்து தடுப்பூசி செலுத்தும் பணியில் செவிலியர் - நெகிழவைக்கும் சம்பவம்

இந்த கல்லறைகள் டிபார்ட்மெண்டின் ஓய்வு பெற்ற நாய்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே முதல் முறையாக கேரளா போலீஸ் அகாடமி கேம்பஸில் ஸ்னிஃபர் நாய்களுக்கான கல்லறை அமைக்கப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த கல்லறை அந்த அகாடமியில் உள்ள நாய்களுக்கான ஓய்வு மற்றும் மறுவாழ்வு மையமான “விஷ்ராந்தி” அருகே கட்டப்பட்டுள்ளது. கேரள போலீஸின் K-9 ஸ்குவாட் மூலம் கேரள மக்களுக்கு சேவை செய்து இறந்த “நாய் அதிகாரிகளின்” நினைவகம் அமைதியான மற்றும் கண்ணியமான இடத்தைக் கொண்டிருப்பது கேரள காவல்துறை விஷனின் ஒரு பகுதியாகும்.

சுழற்சி அடிப்படையில் ஒரே குழியில் பல அடக்கங்களை மேற்கொள்ள மொத்தம் 10 கல்லறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கல்லறைகள் ஒரு வட்ட வடிவத்தில் கட்டப்பட்டுள்ளன மற்றும் இறுதி சடங்கின் போது இறந்த உடலை வைப்பதற்கு நடுவில் ஒரு டேபிள் போன்ற ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லறையும் கிரானைட் அடுக்குகளால் மூடப்பட்டிருக்கும், மற்றும் சேவைக்கு பின்னர் அடக்கம் செய்யப்பட்டு ஓய்வெடுக்கும் நாய்களின் பெயர்களை பொறிக்க தேக்கு மரத்தால் செய்யப்பட்ட பலகையும் உள்ளது. ஒவ்வொரு கல்லறையின் தலை பகுதியிலும் ஒரு சைப்ரஸ் மரங்கள் (ஊசியிலை மரங்கள்) நடப்படுகிறது. 10 சென்ட் நிலத்தில் ரூ.10 லட்சம் செலவில் இந்த கல்லறை பகுதி கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

Also Read : தாத்தா செய்த காரியத்தால், மகன் சித்தப்பாவான கொடுமை... டிக் டாக்கில் கண்ணீர் வடித்த இளைஞர்!!

மக்களுக்கு சேவை செய்து ஓய்வு பெற்ற நாய்களுக்கான இல்லத்தில் தற்போது மொத்தம் 19 நாய்கள் உள்ளன, அவை முறையான மருத்துவ ஊழியர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களால் வளர்க்கப்படுகின்றன. அவர்கள் எடை மற்றும் உயரத்திற்கு ஏற்ப மருத்துவர்கள் ஒரு சீரான உணவை கொடுத்து வருகின்றனர். இந்த மையம் ஸ்னிஃபர் நாய்களின் சேவைகள், பங்களிப்பு மற்றும் தியாகங்களை ஆவணப்படுத்துகிறது. கேரள காவல்துறையின் அதிகாரப்பூர்வ வெப்சைட் தகவலின் படி, K9 ஸ்குவாட்ஸில் தற்போது 82 நாய்கள் பணியில் உள்ளன. இவற்றில் பாதி ஸ்னிஃபர் மற்றும் மற்ற பாதி டிராக்கர் நாய்கள் ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: