காரிலிருந்து வெளியே வர ஹாரனை அடித்து கவனத்தை ஈர்த்த நாய்! க்யூட் வீடியோ

காரிலிருந்து வெளியே வர ஹாரனை அடித்து கவனத்தை ஈர்த்த நாய்! க்யூட் வீடியோ
நாய்
  • News18
  • Last Updated: January 13, 2020, 6:39 PM IST
  • Share this:
காரில் அடைத்துவைத்துக்கப்பட்ட நாய் ஒன்று கதவைத் திறப்பதற்காக தொடர்ச்சியாக ஹாரன் அடித்தது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹாஃப் என்பவர் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் சாலை ஓரமாக கார் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. அந்த காரின் உள்ளே, இரண்டு நாய்கள் உள்ளன. அதில், ஒரு நாய் கதவை திறந்து தன்னை வெளியேவிட வேண்டும் என்பதை வெளிப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக ஹாரன் அடித்து ஒலி எழுப்புகிறது.

பொறுமையில்லாமல் தொடர்ச்சியாக அந்த நாய் ஒலி எழுப்பியது. பின்னர், ஒருவர் வந்து காரின் கதவைத் திறந்துவிட்ட பிறகு அமைதியாக வெளியே வந்தது அந்த நாய். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதுவரையில் 50,000-க்கும் அதிகமானோர் அந்த வீடியோ பார்த்துள்ளனர். பலரும் நாயின் செயல் ரசிக்கும்படி இருந்ததாக கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர்.

Also see:

First published: January 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்