முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / பாக்கெட்டில் மொபைல் போன்.. அன்றே கணித்த நாளிதழ்.. 1963-ல் வெளியான கட்டுரை வைரல்..!

பாக்கெட்டில் மொபைல் போன்.. அன்றே கணித்த நாளிதழ்.. 1963-ல் வெளியான கட்டுரை வைரல்..!

1963ஆம் ஆண்டு வெளியான பத்திரிகை

1963ஆம் ஆண்டு வெளியான பத்திரிகை

சமையலறையில் இல்லத்தரசிகள் உணவு தயாரிப்பதில் பிசியாக இருக்கும் சமயத்தில் Loud speaker மூலமாகவோ அல்லது Intercom நிலையமாகவும் வருங்காலத்தில் பயன்படுத்தலாம் என அப்போதே அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தற்போதைய காலத்தில்  மொபைல் போன்கள் நம் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டன. காலை எழுவது முதல் இரவு படுக்கச் செல்லும் வரை செல்போன்கள் இன்றி நம்மால்  5 நிமிடங்கள் கூட இருக்க முடியாத நிலைதான் உள்ளது. செல்போன்கள் அதிலும் குறிப்பாக ஸ்மார்ட் போன் இல்லை என்றால் இந்த உலகம் எப்படி இயங்கும் என்று கற்பனை செய்துபாருங்கள். நிச்சயம் முடியாது ஏனென்றால் அழைப்புகள் மட்டும் இன்றி, வீடியோ கால், ஆன்லைன் பணப்பரிமாற்றம், வங்கி பரிவர்த்தனை, சமூக வலைதளங்கள், உணவு ஆர்டர், ஆன்லைனில் ஷாப்பிங், என அனைத்து நமது அத்தியாவசிய தேவைகளுக்கும் ஸ்மார்ட் போன் இன்றி நம்மால் வாழவே முடியாது என்றாகிவிட்டது.

மேலும், காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும்போதும், சைக்கிளில், பைக்கில் செல்லும்போதும், பேருந்தில், ரயிலில் பயணிக்கும்போதும் தொலைபேசியைக் கூடவே எடுத்துச் செல்கிறோம். பயணத்தின்போதே உறவினரோடு தொடர்புகொண்டு பேசுகிறோம். செல்லுமிடமெல்லாம் எடுத்துச்செல்ல முடிவதால் 'செல்பேசி' என்றும் பெயர் வைத்துள்ளோம். பையிலும் கையிலும் எடுத்துச் செல்ல முடிவதால் கைபேசி என்றும் அழைப்பதுண்டு.

இந்த வளர்ச்சி வரும்காலத்தில் இல்லாமல் போகலாம், ஒருவேளை தற்போது பயன்படுத்திவரும் டெக்னாலஜியை மிக உயர்தர டெக்னாலஜியாகவும் வளர்ச்சி பெறலாம். இது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டுவரும் வல்லுனர்கள் வருங்கால தொழில்நுட்பங்களை பற்றியும் அவர்களின் கண்டுபிடிப்புகள் பற்றியும் சமூக வலைதளங்கள் மூலமாகவோ அல்லது ஊடகங்கள் வாயிலாகவோ தெரிவிப்பது வழக்கம்.

Read More : ரூபாய் நோட்டுகள் எண்ண தெரியாத மணமகன்... திருமணத்தை நிறுத்திய மணமகள் - வைரல் சம்பவம்

அந்த வகையில், 1963ஆம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி அன்று ஓஹியோவை தளமாகக் கொண்ட செய்தித்தாளான Mansfield News பத்திரிகையில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், அதில், நீங்கள் எதிர்காலத்தில் தொலைபேசியை பாக்கெட்டில் எடுத்துச் செல்ல முடியும் என்ற தலைப்பிலான கட்டுரை உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்னதாகவே வெளியிடப்பட்ட இந்த செய்தி மூலம் அப்போதே தொலைபேசிகளை கையடக்கத்தில் பயன்படுத்துவதற்கான சோதனை தொடங்கியது தெரியவந்துள்ளது.

மேலும், சமையலறையில் இல்லத்தரசிகள் உணவு தயாரிப்பதில் பிசியாக இருக்கும் சமயத்தில் Loud speaker மூலமாகவோ அல்லது Intercom நிலையமாகவும் வருங்காலத்தில் பயன்படுத்தலாம் என சமீபகால டெக்னாலஜிகள் குறித்து அப்போதே அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் "நீங்கள் எதிர்காலத்தில் தொலைபேசியை எடுத்துச் செல்ல முடியும்" என்ற தலைப்பில், இன்னும் சில நாட்களில், மான்ஸ்ஃபீல்டர்கள் தங்கள் தொலைபேசிகளை தங்கள் பைகளில் எடுத்துச் செல்வார்கள் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஆய்வகத்தில் கையடக்க தொலைபேசி உருவாக்கப்படுவதாக கட்டுரையில் அப்போதே தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன் கணிக்கப்பட்ட அந்த செல்போன் 1983 ஆம் ஆண்டு மோட்டோரோலாவால் வணிக ரீதியாக தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Mobile phone, Trending, Viral