கொரோனா, கேன்சர் நோய்களுக்கு சிகிச்சையளிக்க நவீன தொழில்நுட்பம் - இந்திய விஞ்ஞானிகள் சாதனை!

மாதிரி படம்

மருத்துவ ஆய்வுக்காகவும் கேன்சர் மற்றும் மூளை நரம்பியல் நோய்களான அல்சைமர் மற்றும் பார்க்கின்சன் போன்ற நோய்களுக்கு எந்த மாதிரியான மருத்துவ சிகிச்சை முறை அளிப்பது கண்டறிய உதவும் என்று கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஐஐடி மெட்ராஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த எம்ஐடி (Massachusetts Institute of Technology)-யைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அழைக்கப்படும் மனித மூளை திசுக்களை 3டி அச்சிடப்பட்ட பயோரியாக்ட்டர் (Bioreactor) உதவியுடன் வளர்த்து சாதனை புரிந்துள்ளனர்.

இது மூளை திசுக்கள் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு, கொரோனாவுக்கான முன் மருத்துவ ஆய்வுக்காகவும் கேன்சர் மற்றும் மூளை நரம்பியல் நோய்களான அல்சைமர் மற்றும் பார்க்கின்சன் போன்ற நோய்களுக்கு எந்த மாதிரியான மருத்துவ சிகிச்சை முறை அளிப்பது கண்டறிய உதவும் என்று கூறப்படுகிறது.

பொதுவாக நீண்ட நாட்கள் திசுக்களை வளர்ப்பது சவாலானதாக கருதப்படுகிறது. தற்போதைய முறைப்படி இன்குபேசன் மற்றும் இமேஜிங் முறையில் செல்களை தனியாக பிரித்து ஆராயும்போது அது தவறான முடிவுகளையும் அல்லது அந்த செல்கள் மாசடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தற்போது கண்டுபிடிக்கப்பட்ட புதிய முறையின் மூலம் செல்கள் இலகுவாகவும், எந்த தடையும் இன்றியும் வளரச் செய்ய முடியும். இந்த 3டி பிரின்ட்டட் மைக்ரோ இன்கியூபேட்டர் மற்றும் இமேஜிங் சாம்பர் கையடமாக்கமாக உருவாக்கப்படும் என்றும் அது நீண்ட காலம் மூளையை தெளிவுப்படுத்தி பார்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், ஐஐடி மெட்ராஸின் மின்னியல் துறையின் பேராசிரியர் அனில் பிரபாகர் கூறியதாவது, இந்த முறையில் உறுப்புகளின் மாதிரியில் ஒரே நேரத்தில் பல இடங்களில் செல்களை வளர செய்ய முடியும். மேலும் மருந்துகளின் செயல்பாடுகளை அறிய முடியும். தவறுகளை தவிரான முடிவுகள் வருவதை தவிர்க்க முடியும், நேரம் விரயமாவது தவிர்க்க முடியும். ஐ.ஐ.டி மெட்ராஸில் உள்ள கணக்கீட்டு மூளை ஆராய்ச்சி மையத்தின் (சி.சி.பி.ஆர்) நிதியுதவியுடன் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது என்றார். இந்த தொழில்நுட்பத்திற்கு இந்திய காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

Also read... ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளம் - மைக்ரோசாஃப்ட் தலைமையகத்தில் வேலைக்கு சேர்ந்த ஐதராபாத் பெண்!

செல்களை ஆராய்ச்சி செய்வது என்பது, முன்கூட்டியே கொரோனா பாதிப்பை அறிவது, கேன்சர் மருந்துகளை கண்டறிவது ஆகியவற்றிற்கும் உதவும். ஆனால் நீண்ட காலத்துக்கு செல்களை வளர்ப்பதும், பிறகு அதனை ஆராய்ச்சி செய்வதும் கடினமானதாக இருக்கிறது. அதனால் இந்த புதிய முறை மருத்துவ உலகில் வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.

இந்தியர்களின் பங்களிப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம், உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. மேலும் பல கண்டுபிடிப்புகளுக்கு வித்திடும் என்ற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. கொரோனா போன்ற தொற்று நோய்கள் நாளுக்கு நாள் மக்களை பாதித்து வருகிறது. புற்றுநோய் போன்ற கொடிய நோய் பாதிப்பும் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இந்த மாதிரியான தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மக்களிடையே ஒரு வாழ்வின் மீதான நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: