ஆன்லைன் வகுப்பின்போது தாழ்த்தப்பட்ட மாணவர்களை கீழ்த்தரமாக பேசிய ஐஐடி பேராசிரியை!

ஐஐடி

ஆன்லைன் வகுப்பின்போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய ஐஐடி பேராசிரியைக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது

 • Share this:
  ஆன்லைன் வகுப்பின்போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய ஐஐடி பேராசிரியைக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

  மேற்கு வங்கத்தில் உள்ள ஐஐடி காரக்பூரில் பேராசிரியையாக பணியாற்றி வருபவர் சீமா சிங். இவர் ஐஐடி காரக்பூரில் தாழ்த்தப்பட்ட/ பழங்குடியின மாணவர்களுக்கான ஒரு வருட ஆயத்தப்படிப்பில் ஆங்கில வகுப்புகளை எடுத்து வருகிறார்.

  கொரோனா பரவல் காரணமாக  மாணவர்களுக்கு சீமா, ஆன்லைனில் வகுப்பு எடுத்துள்ளார்.  அப்போது, தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்கவில்லை எனக் கூறி மாணவர்கள் தகாத வார்த்தைகளால் பேசிய சீமா, பாரத் மாதா கி ஜெய் என உச்சரிக்கவும் வற்புறுத்தியுள்ளார்.

  கொரோனா தொற்றால் தனது  தாத்தா உயிரிழந்ததால் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியவில்லை என கூறிய மாணவியையும் தகாத வார்த்தைகளால் பேசிய சீமா, மாணவர்களை சாதி ரீதியாகவும் திட்டியதாக கூறப்படுகிறது.

  மத்திய அமைச்சர்களிடமே புகார் அளித்தாலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் மாணவர்களிடையே பேராசிரியை பேசியுள்ளார்.

  தான் சொல்வதைக் கேட்காமல் போனால் அனைவருக்கும் பூஜ்யம் மதிப்பெண்கள் தான் வழங்கப்படும் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்திடமும், சிறுபான்மையினர் நலத்துறையிடமோ சென்று தன் மீது புகார் தெரிவித்தாலு யாராலும் தன்னைத் தடுக்க முடியாது என்று மிரட்டலாக கூறியுள்ளார்.

  இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியையின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பலர், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

  மேலும் படிக்க... இனி இந்தியில் பேசமுடியாது..ஸ்டெம்ப் மைக்கில் பதிவான டோனியின் குரல்

  இந்நிலையில், பேராசிரியை மாணவர்களை தகாத வார்த்தைகளால் பேசிய விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், இந்த சம்பவம் தொடர்பாக ஐஐடி காரக்பூர், கல்வி அமைச்சகம் மற்றும் மேற்கு வங்க அரசு ஆகியவை 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: