ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

அதிகமான சம்பளம் தேவையில்லை; புதிதாகப் பிறந்த பெண் குழந்தைக்காக வேலையை ராஜினாமா செய்த ஐஐடி பட்டதாரி

அதிகமான சம்பளம் தேவையில்லை; புதிதாகப் பிறந்த பெண் குழந்தைக்காக வேலையை ராஜினாமா செய்த ஐஐடி பட்டதாரி

 அங்கித் ஜோஷி

அங்கித் ஜோஷி

குழந்தை பிறந்தால் ஆண்களுக்கு அலுவலகத்தில் வழங்கப்படும் ஒரு வாரம் விடுமுறை தனக்கு போதுமானதாக இல்லாததால் வேலையை ராஜினாமா செய்துள்ளார் ஐஐடி பட்டதாரி ஒருவர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  குழந்தை பிறந்தால் ஆண்களுக்கு அலுவலகத்தில் வழங்கப்படும் ஒரு வாரம் விடுமுறை தனக்கு போதுமானதாக இல்லாததால், புதிதாகப் பிறந்த தன் பெண் குழந்தையை பார்த்துக் கொள்ள தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துள்ளார் ஐஐடி பட்டதாரி ஒருவர்.

  கராக்பூரை சேர்ந்த ஐஐடி பட்டதாரி அங்கித் ஜோஷி என்பவர், மிக அதிகமான சம்பளம் பெறும் ஒரு வேலையில் இருந்து வந்துள்ளார். சமீபத்தில் இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. வழக்கமாக அலுவலகங்களில் ஆண்களுக்கு மகப்பேறு விடுமுறையாக ஒரு வார கால விடுமுறை அளிக்கப்படும். அதேபோலவே அங்கித்திற்கும் ஒரு வார காலம் மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டது.

  ஆனால் அங்கீத்தினால் தனது பெண் குழந்தையை விட்டு பிரிந்து இருக்க முடியவில்லை. அந்த ஒரு வார காலம் விடுமுறை அவருக்கு போதுமானதாக இல்லாமையால் தான், அதிக சம்பளம் தரும் நல்ல வேலையாக இருந்தாலும் தன்னுடைய குழந்தைக்காக அந்த வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

  இதை பற்றி அங்கித் கூறுகையில் “சில நாட்களுக்கு முன் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. என் குழந்தைக்காக அதிக சம்பளம் தரும் என்னுடைய வேலையை நான் ராஜினாமா செய்து விட்டேன். இது மற்றவர்களுக்கு வினோதமான முடிவாக தெரியும் என்று என்னால் உணர முடிகிறது. பலரும் என்னிடம் 'எதற்காக வேலையை ராஜினாமா செய்தாய்? இனிமேல் எவ்வளவு கஷ்டமாக இருக்கும் தெரியுமா’ என்று கூறினர். ஆனால் அவை எல்லாவற்றையும் தாண்டி என் மனைவி ஆகான்ஷா இந்த விஷயத்தில் எனக்கு துணையாக என்னுடன் நின்றார்” இன்று அங்கித் தெரிவித்துள்ளார்.


  ஏமாத்திட்டாங்க... 50 இன்சல 6 இன்ச் கம்மியா இருக்கு - டிவியை அளந்து பார்த்து புகார் அளித்த நபர்.!

  மேலும் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஸ்பிட்டி வேலிக்கு (Spiti valley) அவர்கள் சுற்றுலா சென்ற போது அவர்களுடைய குழந்தைக்கு “ஸ்பிட்டி” என்ற பெயரையே வைப்பதாக முடிவு செய்து இருந்தனர். “எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் ஸ்பிட்டி என்று பெயர் வைக்க நினைத்திருந்த எங்களுடைய கனவு கடந்த மாதம் நனவானது. எங்கள் இதயம் நிறைந்துள்ளது. எனக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே, குழந்தை பிறந்தால் என்னுடைய முழு நேரத்தையும் என் குழந்தையுடன் தான் செலவழிக்க வேண்டும் என எண்ணியிருந்தேன். அதற்கு இந்த ஒரு வார மகப்பேறு விடுமுறை கண்டிப்பாக போதாது” என்று அங்கித் தெரிவித்துள்ளார்.

  மேலும் இவருடைய மனைவி கடந்த ஆறு மாதங்களாக மகப்பேறு விடுமுறையில் இருந்துள்ளார். இவருடைய குழந்தை பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் அங்கித்தின் மனைவிக்கு மேனேஜராக பதவி உயர்வு கிடைத்துள்ளது. இதனால் இவர் மனைவியின் வேலையும், தாய்மையும் ஒருசேர முழுமை அடைந்துள்ளதாக அங்கித் கூறியுள்ளார்.

  இதுதான்யா ஜப்பானு.. கால்பந்து மேட்ச் முடிஞ்சதும் ஸ்டேடியத்தை சுத்தம் செய்த ஜப்பான் ரசிகர்கள்.. குவியும் பாராட்டுகள்..

  இதைப் பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அங்கீத்தின் பதிவிற்கு பலரும் தம்முடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Trending, Trending News