முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / காட்டிற்கு செல்லும் போது விலங்குகளை போல நடந்து கொள்ளுங்கள் - வரவேற்பை பெற்ற IFS அதிகாரியின் ட்வீட்

காட்டிற்கு செல்லும் போது விலங்குகளை போல நடந்து கொள்ளுங்கள் - வரவேற்பை பெற்ற IFS அதிகாரியின் ட்வீட்

வைரலாகும் பதிவு

வைரலாகும் பதிவு

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு IFS அதிகாரி பர்வீன் கஸ்வான் (Parveen Kaswan) மக்களுக்கு சோஷியல் மீடியா மூலம் ஒரு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரு நாட்டின் சமூக-கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் சுற்றுலா துறை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சமீபத்தில் உலக சுற்றுலா தினம் அனுசரிக்கப்பட்டது.

இதனிடையே உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு IFS அதிகாரி பர்வீன் கஸ்வான் (Parveen Kaswan) மக்களுக்கு சோஷியல் மீடியா மூலம் ஒரு வேண்டுகோள் விடுத்து உள்ளார். சுற்றுலா பயணிகள் காடுகளுக்கு செல்லும் போது பொறுப்பான சுற்றுலா பயணிகளாக நடந்து கொள்ள அறிவுறுத்தி காடுகளின் தூய்மை குறித்த விழிப்புணர்வை எடுத்துரைத்துள்ளார்.

இது தொடர்பான தனது ட்விட்டர் பதிவில் IFS அதிகாரி பர்வீன் கஸ்வான், சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதியில் குப்பைகளை வீச அல்லது கொட்ட வேண்டாம் என்றும், பயணத்தின் போது பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். இந்திய வன சேவை அதிகாரி கஸ்வான் பதிவிட்டுள்ள ட்விட்டில், பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள் நிறைந்த அழகிய மலைப்பாதையின் ஃபோட்டோவையும் ஷேர் செய்து இருக்கிறார்.

Read More : முன்னணி நிறுவன சிஇஓ-க்களை பின்னுக்குத் தள்ளிய டிக்-டாக் பிரபலம் ! ஆண்டு வருமானம் என்ன தெரியுமா?

ரயில் பாதைகள் அல்லது சாலைகளில் பயணிகள் உணவு அல்லது ரேப்பர்களை வீசி விட்டு செல்வது எப்படி காட்டு விலங்குகளை ஈர்த்து அவற்றை விபத்தில் சிக்க வைக்கின்றன என்பதை பற்றியும் தனது ட்விட்டில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அன்புள்ள நண்பர்களே இன்று உலக சுற்றுலா தினம். வனத்திற்கு சுற்றுலா செல்லும் போது நீங்கள் விலங்குகள் போல் நடந்து கொள்ளுங்கள். உணவையோ, ரேப்பர்களையோ ரயில் பாதை அல்லது சாலைகளில் வீசாதீர்கள். இது வன விலங்குகளை கவர்ந்து அவற்றுக்கு விபத்துகளை ஏற்படுத்துகிறது. வன விலங்குகள் தங்களது கழிவுகளை உங்கள் வீட்டில் கொட்டிவிட்டு வெளியேறினால் நீங்கள் எப்படி உணருவீர்கள்.?" என்று கேள்வியும் எழுப்பி உள்ளார். இறுதியாக எங்கும் எப்போதும் பொறுப்பான சுற்றுலா பயணியாக இருங்கள் என்றும் IFS அதிகாரி பர்வீன் கஸ்வான் அறிவுறுத்தி உள்ளார்.

பொது இடங்கள் மற்றும் காடுகளில் குப்பைகளை குவிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றிய அதிகாரி பர்வீன் கஸ்வானின் கவலையை பல சோஷியல் மீடியா யூஸர்கள் ஆதரித்தனர். ஒரு யூஸர் கூறுகையில் “மக்கள் தாங்கள் வசிக்கும் நிலத்தின் மீதும் அக்கறை காட்டுவதில்லை, விலங்குகள் வசிக்கும் காடுகளின் மீதும் அக்கறை காட்டுவதில்லை. நம்மவர்கள் குப்பைகளை எங்கு பார்த்தாலும் வீசுகிறார்கள். எவ்வளவு சொன்னாலும் திரும்ப திருப்ப அதையே செய்கிறார்கள்" என்று ஆதங்கம் தெரிவித்து உள்ளார். மற்றொரு யூஸர் குப்பைகளை பொறுப்பின்றி பொது வெளியில் வீசும் நபர்களுக்கு ரூ.5000 வரை அபராதம் விதிக்கலாம் என்று யோசனை தெரிவித்தார்.

மற்றொரு யூஸர் வனப்பகுதிக்கு செல்லும் போது மக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்று குறிப்பிட்டார். “ஒருபோதும் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பொருட்களை (பாட்டில்கள், ரேப்பர்கள், பாலிதீன் பைகள் போன்றவை) காட்டில் வீச வேண்டாம். பிளாஸ்டிக் கழிவுகளை உங்களுடன் எடுத்துச் சென்று, உங்கள் வீட்டில் உள்ள குப்பை டப்பா அல்லது குப்பை தொட்டிகளில் கொட்ட அறிவுறுத்தி உள்ளார்.

First published:

Tags: Trending, Tweet, Viral