பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் சுதந்திரம் என்பது உரிமையாகவுள்ளது. மனிதர்களுக்கு எந்தளவு சுதந்திரம் தேவையோ அதே அளவு விலங்குகளுக்கு தேவை. அது வாழும் இடத்தில் இருந்து பிரித்து அதனை கூட்டில் வைத்து வேடிக்கைபார்ப்பது இயற்கைக்கு மாறான ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது. இப்படி கூண்டில் அடைக்கப்பட்ட பல வகையான விலங்குகளை விடுதலை செய்யும் வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவிற்கு தலைப்பாக "விடுதலை என்றால் இப்படி தான்" இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வனத்துறை அதிகாரி பகிரந்த வீடியோ பலரின் மனங்களைக் கவர்ந்துள்ளது. சிம்பான்சி, மான்கள், சிறுத்தைகள், பறவைகள், குதிரைகள், மேலும் பல சிறைப்பட்ட விலங்குகள் விடுதலை செய்யப்படுவதை அந்த வீடியோவில் பார்க்கமுடிகிறது. கூண்டில் இருந்து வெளியில் வந்தவுடன் ஆர்வத்துடன் ஒடி செல்லும் விலங்குகளின் காட்சி பார்ப்பவரை உருக வைத்துள்ளது.
This is how freedom looks like. pic.twitter.com/EFUp4fT2sO
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) March 4, 2023
Also Read : உலகில் வாழத்தகுதியற்ற 6 இடங்கள்.. சவால்களை சமாளித்து வாழும் மனிதர்கள்
சுமார் 2 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவை சுமார் 75 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் இயற்கையின் மேல் ஆர்வம் கொண்டவர். இது போன்ற பல விலங்குகள் வீடியோவை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Animals, Viral Video