ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

உஷார் மக்களே.. செல்போனுக்கு வரும் வேலைவாய்ப்பு.. பணம் பறிபோகும் மோசடி!!

உஷார் மக்களே.. செல்போனுக்கு வரும் வேலைவாய்ப்பு.. பணம் பறிபோகும் மோசடி!!

எச்சரித்த வனத்துறை அதிகாரி

எச்சரித்த வனத்துறை அதிகாரி

தனக்கு வந்த SMS மோசடி என தெரிந்து கொண்ட அந்த அதிகாரி அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி தன்னுடைய ஃபாலோவர்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  9700 ரூபாய் சம்பளம் தருவதாக கூறி தனக்கு வந்த SMS-ன் ஸ்கிரீன்ஷாட்டை ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார் வனத்துறை அதிகாரி ஒருவர்.

  நம் அனைவருக்கும் தினந்தோறும் பல விதமான தேவையற்ற எஸ்எம்எஸ் வந்த வண்ணம் இருக்கும் உதாரணத்திற்கு KYC வகை SMS, OTP சம்மந்தப்பட்ட SMS போன்ற ஸ்பேன் மெசேஜ்கள் தற்போது அதிக அளவில் வருகின்றன. மேலும் இன்றைய நிலையில் இப்படி நவீன முறையில் பலவித மோசடிகள் நடப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஷ்வான் என்பவரின் மொபைலுக்கு வந்த ஒரு மோசடி SMS ஐ பற்றிய விவரத்தை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

  இவர் தனது பணியின் போது காடுகளில் தன்னுடைய அனுபவங்களை ட்விட்டரில் பகிர்ந்து ஒரு பிரபலமாக மாறியுள்ளார். மேலும் நிறைய ஃபாலோவர்களையும் வைத்துள்ளார். அவருக்கு வந்த SMS இல் “உங்களது ப்ரோஃபைல் எங்கள் நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் உங்களுக்கு 9700 ரூபாய் சம்பளம் அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்" என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த SMS இல் அவர்களை தொடர்பு கொள்வதற்கான வாட்ஸ்அப் லிங்க்கும் சேர்க்கப்பட்டுள்ளது.

  Read More : ஹெல்மெட் போடாததற்கு ஆதாரத்தை காட்டுங்க... சவால்விட்டு அசிங்கப்பட்ட வாகன ஓட்டி

  இது ஒரு மோசடி SMS என தெரிந்து கொண்ட அந்த அதிகாரி அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி தன்னுடைய ஃபாலோவர்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார். மேலும் அந்த ஸ்க்ரீன்ஷாட்டை இணைத்து அதனோடு கடைசியாக எனக்கு வேலை கிடைத்து விட்டது இப்போது என்ன செய்வது என குழப்பமாக உள்ளது நகைச்சுவையாக கூறியுள்ளார்.

  இதை அவர் பதிவேற்றியதன் முக்கிய நோக்கமே மக்களுக்கு இதுபோன்ற மோசடி SMS அல்லது இணைப்புகள் வந்தால் அதனை கிளிக் செய்யாமல் அப்படியே ஒதுக்கி விட வேண்டும் என்று தெரிவிப்பதற்காக தான் என்று கூறியுள்ளார்.

  அதில் “அன்பு நண்பர்களே இன்றைய காலகட்டத்தில் பல்வேறு மோசடி கும்பல்களும் மோசடி நிறுவனங்களும் இதுபோன்ற SMS மற்றும் E-mail-களை அனுப்பி வாடிக்கையாளர்களின் தகவலை திருட பார்க்கின்றனர். தயவுசெய்து அந்த லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்தீர்கள் என்றால் உங்களது தகவல் திருடப்படுவதற்கும், ஹேக் செய்யப்படுவதற்கும் அல்லது உங்களது கணக்கிலிருந்து பணம் திருடப்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது" என பதிவிட்டுள்ளார்.

  அவரது இந்த பதிவிற்கு பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் பலர் தங்களுக்கு ஏற்பட்ட இது போன்ற அனுபவங்களை பற்றியும் பகிர்ந்து அதன் ஸ்க்ரீன்ஷாட்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர் "எனக்கும் இது போன்ற ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. இது போலவே பல சலுகைகள் இருப்பதாக கூறி அப்போதிலிருந்து இப்போது வரை பல SMSகள் வந்து கொண்டிருந்து தான் இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  மற்றொருவர் கூறுகையில் “இதனை ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரில் உள்ள DND எனப்படும் ஆப்பை டவுன்லோடு செய்வதன் மூலம் தடுக்க முடியும். ட்ராயினால் உருவாக்கப்பட்ட அந்த ஆப்-பில் உங்களது புகார்களை பதிவு செய்யலாம். இது மிக எளிமையானதும் அதே சமயத்தில் உபயோகமானதாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

  ஏற்கனவே இது போல பல்வேறு வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட மோசடிகள் நடந்து வருவதை மத்திய உள்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. வெளிநாட்டு வேலை இருப்பதாகவும், அதற்கு விண்ணப்பிப்பதற்கு இவ்வளவு கட்டணம் கட்ட வேண்டும் அல்லது இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும் என்பது போல பல மோசடி SMS வந்த வண்ணம் இருக்கின்றன என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கான வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் “இந்த காலத்தில் பல்வேறு புதிய முறைகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர்.

  முக்கியமாக நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால் ஜாக்கிரதையாக இருங்கள்! முகம் தெரியாத பல மோசடிக்காரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்களை ஏமாற்றக் கூடும். மோசடி வெப்சைட்டும் அல்லது மோசடி கடிதம் ஆகிய எதுவாக இருந்தாலும் நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்" என்று மூன்று குறிப்புகள் அடங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Job search, Online Frauds, Trending, Viral