ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

30 வினாடிகள் டைம்.. பாலைவனத்தில் ஒளிந்திருக்கும் குதிரையை கண்டுபிடித்தால் நீங்கள் தான் ஜீனியஸ்.!

30 வினாடிகள் டைம்.. பாலைவனத்தில் ஒளிந்திருக்கும் குதிரையை கண்டுபிடித்தால் நீங்கள் தான் ஜீனியஸ்.!

ஆப்டிகல் இல்யூசன்

ஆப்டிகல் இல்யூசன்

Optical illusion | பாலைவனம் ஒன்றில் அரேபியர் ஒருவர் நிற்பது போன்று அமைந்துள்ளது. இந்த மனிதர் குதிரையை மறைத்து வைத்துள்ளார் என்றும், இதை நீங்கள் 30 வினாடிகளுக்குள் கண்டுபிடித்துவிடுங்கள் என்று நமக்கு சவால் விடுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆப்டிகல் இல்யூசன் எனப்படும் ஒளியியல் மாயை புகைப்படங்கள் தான் இன்றைக்கு நெட்டிசன்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. பொழுதுப்போக்கு அம்சத்திற்காக மட்டும் நாங்கள் இணையத்தைப் பயன்படுத்தவில்லை என்றும் சில ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கும் தற்போது சோசியல் மீடியாவை நாடுகின்றனர் இணைய வாசிகள். நீங்கள் இந்த புகைப்படத்தில் மறைந்திருக்கும் விலங்குகள், பறவைகள், புகைப்படத்தில் உள்ள மாற்றங்கள் என்னென்ன? இதை 5,10, 15 மற்றும் 1 நிமிடத்திற்குள் கண்டுபிடித்துவிடுங்கள் என்று நமது கண்களுக்கும் மூளைக்கும் சவால் விடும் வகையில் தற்போது ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்கள் அமைந்து வருகிறது.

இதோடு சில தேர்வுகளிலும் கூட ஒளியியல் மாயைப் புகைப்பட கேள்விகள் இடம் பெற்றிருக்கும் சூழலில், இதுப்போன்ற புகைப்படம் ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகிறது. இதில், பாலைவனம் ஒன்றில் அரேபியர் ஒருவர் நிற்பது போன்று அமைந்துள்ளது. இந்த மனிதர் குதிரையை மறைத்து வைத்துள்ளார் என்றும், இதை நீங்கள் 30 வினாடிகளுக்குள் கண்டுபிடித்துவிடுங்கள் என்று நமக்கு சவால் விடுகிறது.

நாம் பார்த்தவுடனே நிச்சயம் குதிரை எங்கே நிற்கிறது என்று தேட ஆரம்பிப்போம். முதலில் பாலைவனத்திற்குள் மரங்கள், ஆங்காங்கே சில குடில்கள் மற்றும் இரண்டு அரேபியர்கள் நிற்பது தான் நம் கண்களுக்குத் தெரியவரும். ஆனால் நீங்கள் புத்திசாலியாகவும், நல்ல அறிவுத்திறன் உள்ளவராக இருந்தால் பார்த்தவுடனே 30 வினாடிற்குள் கண்டுபிடித்திருப்பீர்கள். இப்ப நீங்களும் கண்டுபிடித்துவிட்டீர்களா?

புத்திசாலிகளின் லிஸ்டில் இடம் பிடிச்சாச்சா? இல்லையென்றால் இதோ உங்களுக்கான சில டிப்ஸ்கள்..

டிப்ஸ் 1 :

தற்போது சோசியல் மீடியாவில் ஒளிந்திருக்கும் புகைப்படத்தை சற்று உன்னிப்பாகக் கவனியுங்கள். உயரமாக நிற்பவருக்குப் பின்னால் தான் குதிரை ஒளிந்திருக்கிறது. இப்ப கண்டுபிடிச்சீங்களா? இல்லையென்றால் இதோ உங்களுக்கான அடுத்த டிப்ஸ்..

Also Read : மனிதரை போல் காரில் கெத்தாக அமர்ந்து சென்ற நாய் - வைரல் வீடியோ.!

டிப்ஸ் 2 :

கொடுக்கப்பட்ட 30 வினாடிகளுக்குள் ஒரு சதவீத மக்களால் மட்டுமே பாலைவனத்திற்குள் மறைந்திருக்கும் குதிரையைக் கண்டுபிடிக்க முடிந்தது. சிலரால் கண்டுபிடிக்க முடியாமல் திணறினர். இதோ அவர்களுக்கான டிப்ஸ் தான் இது.

Also Read : ”செல்லத்தை தூக்கிட்டு வாங்க”... வயலில் இறங்கி வேலை பார்க்கும் நாயின் வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தின் உள்ள அரேபியரின் இடது புறத்தைச் சற்று உற்றுப்பாருங்கள்.குதிரையின் உடல் அரேபியரின் கையிலும் மறைந்துள்ளது. இப்போதாவது கண்டுபிடித்து விட்டீர்களா? ஆம் என்றால் நீங்களும் அதிபுத்திசாலி பட்டியலில் இடம் பிடித்துள்ளீர்கள் என்று அர்த்தம்.

இதுபோன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகும் ஒளியியல் மாயைப்புகைப்படங்களில் ஒளிந்திருக்கும் விஷயங்களை நீங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், இதன் மூலம் உங்களின் புத்திசாலித்தனம் மற்றும் ஆளுமைப்பண்பு எந்தளவிற்கு உள்ளது என்பது தெரியவரும். எனவே வீட்டில் இருக்கும் போது அல்லது அலுவலகத்தில் ஒர்க் ப்ரஷ் இருக்கும் போது உங்களது மூளைக்கு ரிலாஸ்க் கொடுக்க வேண்டும் என்றால் இந்த ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்களை கொஞ்சம் டிரை பண்ணிப்பார்க்க மறந்துவிடாதீர்கள்..

Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Tamil News, Trending