டிவிட்டரில் ஆவி பறக்க வைத்த இட்லி - அமெரிக்க தேர்தல் வரை ஏற்படுத்திய தாக்கம்

வரலாற்று பேராசிரியரான எட்வர்ட் ஆண்டர்சன்

உலகின் மிக சலிப்பான விசயம் இட்லி தான் வரலாற்று ஆசிரியர் ஒருவர் கொளுத்திப் போட, சமூக வலைதளங்களில் அனல்பறந்த இட்லியின் ஆவி அமெரிக்க அதிபர் தேர்தல் வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிரபல உணவு விநியோக நிறுவனமான சொமேட்டோ, மக்கள் அதிகமாக விரும்புவது ஏன் என உங்களால் புரிந்து கொள்ளவே முடியாத உணவு எது என டிவிட்டரில் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த பிரிட்டனைச் சேர்ந்த வரலாற்று பேராசிரியரான எட்வர்ட் ஆண்டர்சன், உலகத்திலேயே மிகவும் சலிப்பூட்டக்கூடிய உணவு இட்லி தான் என பதிவிட்டார். ஆண்டர்சனின் இந்த ஒரு வரிப்பதிவு ஒட்டுமொத்த தென்னிந்தியர்களையும் கொந்தளிக்க வைத்தது.

பல்வேறு தரப்பு தென்னிந்தியர்கள் ஆண்டர்சனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், கேரள எம்பியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர், வாழ்க்கையை பற்றிய புரிதல் இல்லாதவர்களே இட்லியை விமர்சிக்கிறார்கள் என சாடினார். மற்றொரு பதிவில் இட்லியை தேங்காய் சட்னி, மிளகாய் பொடி,நெய் உள்ளிட்டவற்றுடன் ருசித்து பார்க்க வேண்டும் என்றும் சசி தரூர் வர்ணித்திருந்தார்.

Also read... கொரோனா வைரஸை அமெரிக்கா தோற்கடிக்கும் - அதிபர் டிரம்ப் நம்பிக்கைஇத்தகைய டிவிட்டர் விமர்சனங்களால் நொந்து போன ஆன்டர்சன் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் அப்படி என்னதான் இருக்கிறது என தெரிந்து கொள்ள மதிய உணவுக்காக இட்லி ஆர்டர் செய்து உண்டதாகவும், அதற்கு பிறகும் இட்லி குறித்த தனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பதிவிட்டார்.

இதனிடையே அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் தென்னிந்தியரான கமலா ஹாரீஸ் போட்டியிடுவது, தேர்தல் களத்திலும் இட்லியின் ஆவியை அதிகமாக பரப்பியது. தனக்கு பிடித்த உணவு இட்லி என்றும், தான் சென்னை செல்லும் போதெல்லாம் தனது தாயார் இட்லி செய்து தருவார் என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.

 
Published by:Vinothini Aandisamy
First published: