நம் மூளையின் செயல்பாட்டுத்திறனை அதிகரிக்கும் வகையில் மூளை டீஸர் மேக்ஸ் ஸ்டிக் புதிர் போன்ற விளையாட்டுக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த விளையாட்டுக்கள் ஒரு குறிப்பிட்ட வினாடிக்குள் புதிரை கண்டுபிடிக்கும் வகையில் அமைந்துள்ளன. இப்போது நாம் ஆன்லைனில் விளையாடும் புதிர் விளையாட்டுகள் அனைத்தும் அதிக அளவில் வினா விடை புதிர்களாகவே உருவாக்கப்படுகிறது. தற்போது இது சோஷியல் மீடியாவில் அதிக அளவில் வைரலாகி வருகிறது. இவ்விதமான விளையாட்டுக்கள், புதிர்களில் சுவாரஸ்யத்தை அதிகம் விரும்புபவர்களுக்காக உருவாக்கப்படுகிறது.
இதுபோன்ற மூளை விளையாட்டுக்களில் ஒன்றுதான் இந்த தீப்பெட்டி புதிர் விளையாட்டு. இந்த விளையாட்டு எண்களை மையமாக கொண்டு விளையாடப்படும் ஒரு தந்திரமான விளையாட்டாகும். இந்த விளையாட்டில் ஒரு குறிப்பிட்ட எண்களுக்கு அடுத்து வரக்கூடிய எண்களை கண்டுபிடித்து அந்த புதிரில் வெற்றி காண வேண்டும்.
இதுபோன்ற விளையாட்டுகளை வெற்றியை அதிகம் விரும்புபவர்களும், அடுத்தடுத்து வரக்கூடிய சுவாரஸ்யமான புதிர்களை விரும்புபவர்களும் அதிக அளவில் விளையாடி மகிழ்கின்றனர்.
பொதுவாக தீப்பெட்டி புதிரின் அடுத்தடுத்து வரக்கூடிய எண்களுக்கு இடையே ஒரு பிணைப்பு உண்டு. அதை நாம் கண்டறிந்தால் அடுத்து வரக்கூடிய எண்னை நம்மால் அடையாளம் காண முடியும். இது போன்ற மூளை விளையாட்டுகளில் ஒரு புதிருக்கான விடையை கண்டுபிடிக்க ஆகும் நேரம் 30 வினாடிகள் என்ற அடிப்படையில் உருவாக்கப்படுகிறது.
நீண்ட நேரம் ஃபோன் பயன்படுத்த வேண்டாம் - இப்படிக்கு செல்போனை கண்டுபிடித்த மார்டின் கூப்பர்
இந்த தீப்பெட்டி விளையாட்டில் கூர்ந்து கவனித்தால் ஒவ்வொரு எண்ணின் இறுதியிலும் இரு கோடுகளையும் இணைக்கும் வகையில் ஒரு இணைப்பு அமைந்திருக்கும். அடுத்தடுத்த எண்ணில் இந்த இணைப்புகளின் எண்ணிக்கை ஒவ்வொன்றாக குறையும். இதுபோன்ற ஒரு தீப்பெட்டி புதிரை தற்போது காண்போம்.ஷ
893537? இந்த புதிரை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? எளிதானது தான் ஆனால் கொஞ்சம் சிக்கலானதும் கூட.
இதை உற்றுக் கவனித்தோமானால் இந்த எண்களில் ஒவ்வொரு கோடுகளின் இறுதியில் மற்றொரு கோடு இணைப்பு ஒரு ஜாயிண்ட் மூலம் பிணைப்பது போல அமைந்திருப்பதைக் காணலாம். இதுபோன்ற விளையாட்டுக்கள் தற்போது இணையதளத்தில் அதிகமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இது போன்ற மூளை விளையாட்டுக்கள் மூளையின் செயல்திறன் மற்றும் அதன் நினைவாற்றலை அதிகப்படுத்த உதவுகிறது.
தற்போது இந்த விளையாட்டிற்கான பதிலை அறிந்து கொள்ளலாம். இந்தப் புதிரின் விடை 1 எப்படியானால்,
- 8க்கு 6 இணைப்புகள் உள்ளன
- 9க்கு 5 இணைப்புகள் உள்ளன
- 5க்கு 4 இணைப்புகள் உள்ளன
- 3க்கு 3 இணைப்புகள் உள்ளன
- 7க்கு 2 மூட்டுகள் உள்ளன.
அப்படியானால் விடை உங்களுக்கு தற்போது தெரிந்திருக்கும்.
- 1க்கு 1 இணைப்பு மட்டுமே உள்ளன. இதுபோன்ற விளையாட்டுக்களில் உள்ள நுனுக்கங்களை நம்மால் அறிந்து கொள்ள முடிந்தால் விளையாட்டு சுவாரஸ்யமாக மட்டுமல்லாமல் ஜாலியாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உலகம் முழுவதும் இப்படியாக பல ஆன்லைன் விளையாட்டுக்கள் விளையாடப்பட்டு வருகின்றன. இது போன்ற விளையாட்டுகளுக்கு தீர்வுக்கான குறைந்த நேரமும் சுறுசுறுப்பான மூளையும் அவசியம். இதில் பார்த்தோமானால் குறிப்பிட்ட வினாடிகளில் நாம் பதிலை கண்டுபிடிக்கும் போது அது நம் மூளையின் சுறுசுறுப்பு தன்மையை அதிகரிப்பதோடு அடுத்த விளையாட்டுக்கான தூண்டுதலையும் அதிகரிக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.