ஐந்து பாடங்களிலும் ஒரே மதிப்பெண்களைப் பெற்ற இரட்டைச் சகோதரிகள்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உருவ ஒற்றுமை கொண்ட இரட்டைச் சகோதரிகள் 12-ம் வகுப்புத் தேர்வில் ஐந்து பாடங்களிலும் ஒரே மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 

ஐந்து பாடங்களிலும் ஒரே மதிப்பெண்களைப் பெற்ற இரட்டைச் சகோதரிகள்
ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்கள்
  • Share this:
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் வசிக்கும் இரட்டைப் பிறவி சகோதரிகள் மானசி மற்றும் மான்யா. அவர்கள் இருவரும் நொய்டாவிலுள்ள அஸ்டெர் பள்ளியில் படித்துவந்தனர். இந்த ஆண்டு சி.பி.எஸ்.இ பாடப்பிரிவில் 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய அவர்கள் இருவரும் 95.8 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் மொத்த மதிப்பெண் மட்டும் ஒன்றாக இல்லை. ஐந்து பாடங்களிலும் இருவரும் ஒரே மதிப்பெண்களைப் பெற்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் ஆங்கிலம் மற்றும் கணிணி அறிவியலில் 98 சதவீத மதிப்பெண்களும், இயற்பியல், வேதியியல், விளையாட்டுக் கல்வியில் 95 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். ஒரே மதிப்பெண் பெற்றது குறித்து தெரிவித்த மானசி, ‘நாங்கள் இருவரும் ஒரே மாதிரி இருப்பதால் எல்லோரும் எங்களை நினைவுவைத்திருப்பார்கள். எங்களுடைய பெயர் மட்டும்தான் வேறானது. நாங்கள் நல்ல மதிப்பெண்கள் எடுப்போம் என்று உறுதியாக இருந்தோம். ஆனால், ஒரே மதிப்பெண்களை எடுப்போம் என்று எதிர்பார்க்கவில்லை. தேர்வு எழுதியப் பிறகு இருவரும் ஆலோசனை செய்ததில் மான்யாதான் அதிக மதிப்பெண் பெறுவாள் என்று எதிர்பார்த்தோம்’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து தெரிவித்தி மான்யா, ‘உருவஒற்றுமைக் கொண்ட இரட்டையர்கள் ஒரே மதிப்பெண்கள் எடுத்தார்கள் என்று இரண்டு வருடத்துக்கு முன்பு நான் படித்துள்ளேன். அப்போது, அது எதிர்பாராதவிதமாக நடந்திருக்கும் என்று நினைத்தேன். தற்போது, நாங்கள் ஒரே மதிப்பெண் பெற்றதை இன்னமும் நம்ப முடியவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.


இருவரும் ஜே.இ.இ தேர்வு எழுதுவதற்காக தயாராகிவருகின்றனர்.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading