Home /News /trend /

ஒரே ஆணுடன் உறவுகொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் இரட்டை சகோதரிகள்!

ஒரே ஆணுடன் உறவுகொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் இரட்டை சகோதரிகள்!

இரட்டை சகோதரிகள்

இரட்டை சகோதரிகள்

இவர்கள் இருவரும் பெர்த் என்கிற ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த இளைஞரை துணைவராக ஏற்று, அவருடம் உறவு கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பப்படுகின்றனர்.

உலக அளவில் சில குறிப்பிட்ட இரட்டையர்கள் மட்டுமே மிகவும் பிரபலமானவர்களாக இருப்பார்கள். அறிவியலின் படி இரட்டை குழந்தைகளாக பிறப்பவர்கள் பல்வேறு திறமைகளை கொண்டிருப்பார்கள். அதிலும் சில இரட்டை குழந்தைகள் மட்டுமே ஒரே மாதிரியான தோற்றத்தை கொண்டவர்களாக இருப்பர். பல இரட்டையர்களை எளிதில் அவர்களின் தோற்றத்தை வைத்து யார் என்பதை சரியாக கண்டுபிடித்து விட முடியும்.

அந்த வகையில் உலகில் ஒரே மாதிரியாக இருக்க கூடிய இரட்டையர்களில் அனா மற்றும் லூஸி இரட்டை சகோதரிகளும் இந்த பட்டியலில் அடங்குவர். இவர்களுக்கு தற்போது 35 வயதாகிறது. இவர்கள் இருவரும் பல விஷயங்களை ஒன்றாக செய்ய கூடிய பழக்கம் கொண்டவர்கள். மேலும் தோற்றத்திலும் யார் அனா, யார் லூஸி என்று கண்டுபிடிப்பதில் மற்றவர்களுக்கு சற்று சிரமம் இருக்கக்கூடும். அந்த அளவிற்கு இவர்களிடம் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது.

இருவரும் எல்லா விதத்திலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதற்காக சுமார் $250,000 டாலர்களை அறுவை சிகிச்சைக்காக இவர்கள் செலவு செய்துள்ளனர். இந்திய ரூபாய் மதிப்பில் 1 கோடிக்கும் மேல் இந்த செலவுகள் அடங்கும். குறிப்பாக புருவத்திற்கான சிகிச்சை, மார்பகங்களுக்கான சிகிச்சை ஆகியவற்றை செய்து கொண்டுள்ளனர். வெளி தோற்றத்தில் இருவரும் ஓரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வளவு பணம் செலவு செய்துள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

இது மட்டுமில்லாமல், சாப்பிடுகின்ற உணவுகள், செய்கின்ற உடற்பயிற்சிகள் போன்றவற்றையும் ஒரே மாதிரியாக எடுத்து வருகின்றனர். இந்த இரட்டை சகோதரிகள் 'எக்ஸ்ட்ரீம் சிஸ்டர்ஸ்' (Extreme Sisters) என்கிற அமெரிக்க தொலைக்காட்சி ரியாலிட்டி தொடரில் கலந்து கொண்டுள்ளனர். இதில் இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் கருத்தரிக்க என்னவெல்லாம் செய்து வருகின்றனர் என்பதை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

கருத்தரிக்க உடலில் தட்பவெப்ப நிலை முதல் கருவுறும் நேரம் வரை எல்லாவற்றையும் தெளிவாக செய்து வருவதாக குறிப்பிடுகின்றனர். மேலும் இவ்வாறு செய்து வருவதால் இந்த இரட்டை சகோதரிகள் இருவரும் ஒரே மாதத்தில் கருத்தரிக்க வாய்ப்புள்ளது என்பதையும் அறிந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் பெர்த் என்கிற ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த இளைஞரை துணைவராக ஏற்று, அவருடம் உறவு கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பப்படுகின்றனர். பல விஷயங்களில் ஒன்றாக இருக்கும் இவர்களுக்கு குழந்தை பெற்று கொள்வதிலும் ஒரு ஆணை மற்றும் தேர்ந்தெடுத்து அவரின் மூலம் கருத்தரிக்க முயற்சித்து வருகின்றனர்.

Also read... குடியிருப்பில் பொருட்களை திருடிவிட்டு கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து சென்ற திருடர்கள்!

அனா மற்றும் லூஸி ஆகிய இருவரும் தங்களது உடலின் தட்பவெப்ப நிலையை பரிசோதித்து விட்டு, இருவருக்கும் ஓரளவு சரியாக இருந்தால் பெர்த்தை அழைத்து அவருடன் உறவுகொள்ள தொடங்குவார்களாம். அப்படி செய்தால் மட்டுமே இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் கருத்தரிக்க முடியும் என்பதை இணையத்தின் மூலம் தெரிந்து கொண்டார்களாம்.

எல்லாவற்றிலும் ஒரே மாதிரி இருப்பதால் கருத்தரிப்பதில் ஒரே மாதிரி ஒரே நேரத்தில் கருத்தரிக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த அளவிற்கு முயற்சித்து வருவதாக இந்த இரட்டை சகோதரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள இந்த இணைய பிரியாத அன்பின் காரணமாக எப்போதும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Trending

அடுத்த செய்தி