இரட்டை சகோதரர்களை திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள் - முதல் குழந்தை பிறந்ததால் மகிழ்ச்சி!

இரட்டை சகோதரர்களை திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள் - முதல் குழந்தை பிறந்ததால் மகிழ்ச்சி!

இரட்டை சகோதரர்களை திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள்

ஜோஷ் மற்றும் ஜெர்மி சாலியர்ஸை என்ற இரட்டை சகோதர்களை கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அமெரிக்காவில் பிரிட்டானி மற்றும் பிரியானா டீன் என்ற இரட்டை சகோதரிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஜோஷ் மற்றும் ஜெர்மி சாலியர்ஸை என்ற இரட்டை சகோதர்களை கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஓஹியோவின் ட்வின்ஸ்பர்க்கில் ஒரே நாளில் இருவரது திருமணமும் நடைபெற்றது. அவர்களது திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்திருந்த நிலையில் வைரலானது.

அப்போதிருந்து, அவர்கள் சமூக வலைத்தளங்களிலும், தங்கள் சொந்த ஊரிலும் பிரபலங்களை போலவே நடத்தப்படுகிறார்கள். இந்த நிலையில், சகோதரிகள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இரண்டு ஜோடிகளும் கர்ப்பமாக இருப்பதாக ஷேர் செய்திருந்தனர். எங்களுக்கும் இரட்டையர்கள் பிறக்க ஆசைப்படுகிறோம். மேலும் எங்களுக்கு ஒரே நாளில் குழந்தை பிறக்க வேண்டும், எங்கள் குழந்தைகளை ஒன்றாக வளர்க்க என்றும் விரும்புகிறோம் என்றும் தெரிவித்திருந்தனர்.

முன்னதாக டி.எல்.சி ஆவணப்படமான ‘ட்வின்சேன் வெட்டிங்’-கில் தம்பதிகள் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரிக்க எதிர்பார்த்திருப்பதாக பகிர்ந்து கொண்டனர். அதன்படியே ஒன்றாகவே கருவுற்றனர். இந்த நற்செய்தியை இரட்டை சகோதரிகள் மற்றும் அவர்களது இரட்டை கணவர்கள் கடந்த ஆகஸ்ட் 14, 2020 அன்று தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தனர். அதில் கர்ப்பமாக இருப்பதை அனுபவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம் என குறிப்பிட்டிருந்தனர். மேலும் "எங்கள் குழந்தைகள் உறவினர்களாக மட்டுமல்லாமல் முழு மரபணு உடன்பிறப்புகளாகவும், நல்ல நண்பர்களாகவும் இருப்பார்கள்" என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தனர்.

Also read... மணப்பெண் தேடித்தருமாறு போலீசில் புகார் அளித்த உ.பி நபர்... நாடு முழுவதிலும் இருந்து குவியும் வரன்கள்!

இதனை தொடர்ந்து பிரிட்டானி மற்றும் ஜோஷ் தம்பதியினருக்கு சமீபத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. கடந்த ஜனவரி மாதம் ஜோஷ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவரும், அவரது மனைவியும் தங்கள் குழந்தையான ஜெட் ஸ்லேயர்களுடன் இருக்கும் கியூட்டான புகைப்படங்களை ஷேர் செய்திருந்தார். அதில் “பிரிட்டானிக்கு குழந்தை பிறந்தது என்று அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அனைவரும் "ஜெட் சாலியர்ஸ்"-ஐ இந்த புகைப்படத்தில் பாருங்கள், பிரிட்டானி பிரசவத்திற்கு பிறகு ஆரோக்கியமாக இருக்கிறார். நான் அவரை பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன், ஜெட் அப்பாவாக இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! ” என குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில் ஒரு பக்கத்தில் பிரிட்டானி தனது குழந்தையை கையில் வைத்திருக்கும் வகையிலும், மற்றொரு பக்கத்தில் ஜோஷ் தனது குழந்தையை தொட்டிலில் இருந்து சிரித்தவாறு தூக்கும் வகையிலான புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். குழந்தை ஜெட்டின் அழகான படங்களை ஷேர் செய்ததன் மூலம் இந்த ஜோடிகள் இணையத்தில் உள்ள அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில் ஏராளமானோர் தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: