Home /News /trend /

பழைய ஆடைகளை இப்படியும் மறுசுழற்சி செய்யலாம்... ஐஏஎஸ் அதிகாரி பகிர்ந்த அசத்தல் வீடியோ!

பழைய ஆடைகளை இப்படியும் மறுசுழற்சி செய்யலாம்... ஐஏஎஸ் அதிகாரி பகிர்ந்த அசத்தல் வீடியோ!

பழைய ஆடைகளை இப்படியும் மறுசுழற்சி செய்யலாம்

பழைய ஆடைகளை இப்படியும் மறுசுழற்சி செய்யலாம்

Viral Video | பழைய துணிகளைக் கூட புதுமையான முறையில் பயனுள்ளதாக மாற்றலாம் என்பது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

    இந்தியாவில் எப்போதுமே புதுமையான கண்டுபிடிப்புகளுக்கும், திறமையாளருக்கும் பஞ்சமில்லை. அறிவியல், பொறியியல், இயற்பியல் படித்த அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள் மட்டும் தான் புதிதாக எதையும் உருவாக்கவோ, கண்டுபிடிக்கவோ வேண்டும் என்ற அவசியம் இந்தியாவில் கிடையாது. ஏனெனில் இங்கு திரும்பிய பக்கமெல்லாம் திறமைகள் கொட்டிக்கொடக்கின்றன.

    இரண்டு கை இல்லாதவர் தனக்கு ஏற்றார்போல் ஒரு இருசக்கர வாகனத்தை உருவாக்கி கொள்வார், ஃபார்மூலா ஒன் போன்ற வாகனத்தில் போய் நாங்கள் பால் டெலிவரி செய்வோம், பழைய பொருட்களை வைத்து காரை உருவாக்குவோம் என திரும்பிய பக்கமெல்லாம் இந்தியாவின் சாமானியர்கள் கூட தங்களுக்கு தேவையானதை தாங்களே உருவாக்கிக் கொள்ளும் அளவிற்கு உள்ளனர். இதில் பெரும்பாலானவை ரீ-சைக்கிளிங் எனப்படும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் உருவானவையாகவே இருக்கும்.

    பிளாஸ்டிக்கிற்கு அடுத்த படியாக பழைய துணிகள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தாக அமைகிறது. அப்படிப்பட்ட உடைகளை மறுசுழற்சி செய்வது என்பது மிகவும் குறைவு. எனவே அதில் பெரும்பாலானவை குப்பையாக கழிவுகளுக்கு தான் செல்கின்றன. ஆனால் பழைய துணிகளைக் கூட புதுமையான முறையில் பயனுள்ளதாக மாற்றலாம் என்பது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

    கடந்த சனிக்கிழமையன்று, ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருவதோடு, காண்போரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது. அந்த வீடியோவில், இருவர் ஒரு புடவையை சின்ன சின்ன பகுதிகளாக கிழிக்கின்றனர். கிழிக்கப்பட்ட புடவை துண்டுகளை இரண்டாக இணைத்து, பழைய மற்றும் தூக்கி எறியப்பட்ட ஆடைகளை கயிறுகளாக மாற்றும் இயந்திரமாக வடிவமைக்கப்பட்ட ஒரு மோட்டார் பைக் மீது வைப்பது காண்பிக்கப்படுகிறது. கையால் இயக்கப்படக்கூடிய அந்த எளிய இயந்திரத்தின் உதவியுடன் ஒரு நிமிடத்தில் பழைய புடவை நல்ல வலுவான கயிறாக மாற்றப்படுகிறது.

     

     



     

    இந்த வீடியோவை பதிவிட்ட ஐஏஎஸ் அதிகாரி “ஆடைகளை மறுசுழற்சி செய்வதற்கான அற்புதமான சுதேசி கண்டுபிடிப்பு. நம்மைச் சுற்றி உள்ளூர் திறமைகள் அதிகம். நாம் செய்ய வேண்டியது இந்தச் சூழல் போராளிகளை ஆதரிப்பதும் ஊக்குவிப்பதும் மட்டுமே” என பதிவிட்டுள்ளார்.

    இதுவரை 55,000 பேர் அந்த வீடியோவை கண்டு ரசித்துள்ளனர். ட்விட்டர் யூசர் ஒருவர் வீடியோவிற்கு இப்படி பதிவிட்டுள்ளார், “கழிவை பயனுள்ள பொருட்களாக மாற்றக்கூடிய இந்த மனசு நம் சமூகத்திற்கு தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு நபர், "இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, கிராமப்புறங்களில் நிறைய திறமைகள் உள்ளன, உண்மையில் நம்பமுடியாதவை” என பாராட்டியுள்ளார்.

    ALSO READ |  Watch: 'பகலில் உணவகத்தில் வேலை; ராணுவத்தில் சேர இரவில் 10 கி.மீ ஓட்டம்' - இளைஞரின் வீடியோ Viral

    சிலர் பழமையான கயிறு திரிப்பு முறைகள் குறித்து பகிர்ந்துள்ளனர். பெண்களுக்கு பயிற்சி வழங்கும் ஒரு அமைப்பு, சுப்ரியாவின் பதிவிற்கு அளித்துள்ள பதிலில், தாங்கள் பயிற்சி அளிக்கும் பெண்கள் குழு, பழைய ஆடைகளை கைகளாலேயே திரித்து, அழகான டோர் மேட் உருவாக்கியிருப்பதை பகிர்ந்துள்ளனர். இப்படி பலதரப்பட்ட கமெண்ட்கள் மற்றும் பாராட்டுக்களுடன் இந்த வில்லேஜ் விஞ்ஞானிகளின் வீடியோ தாறுமாறு வைரலாகி வருகிறது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Viral Video

    அடுத்த செய்தி