ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

நீ நல்லா இருப்பா... கலெக்டரை ஆசிர்வதித்த வயதான பெண் - வைரலாகும் வீடியோ

நீ நல்லா இருப்பா... கலெக்டரை ஆசிர்வதித்த வயதான பெண் - வைரலாகும் வீடியோ

ஐஏஎஸ் அதிகாரி

ஐஏஎஸ் அதிகாரி

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்றாலே தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு பணிகளுக்காகக் கலெக்டரை சந்திப்பது வழக்கம். ஒரு சிலர் தங்களுடைய பார்க்க வரக்கூடிய அனைவரிடமும் மரியாதையாக பேசுவார்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Kerala, India

  ஐஏஎஸ் அதிகாரி என்றாலே கெத்தாக வாழ வேண்டும் என்ற எண்ணம் ஒரு சிலருக்கு உள்ளது. அதிலும் ஒரு மாவட்டத்தையே தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார்கள் என்பதால் மக்களிடம் இருந்து மரியாதைத் தானாக கிடைக்கும். அதிலும் வாரந்தோறும் நடைபெறும் குறைதீர்ப்பு நாள்களில் மட்டுமில்லாமல் ஒவ்வொரு நாளும் மக்களின் குறைகளைக் காதுக் கொடுத்து கேட்டாலே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பார்கள் ஐஏஎஸ் அதிகாரிகள்.

  தங்களுக்கானப் பணிகளைச் செய்வதோடு மக்களுக்கு சில நேரங்களில் மரியாதையும் செய்தால் அவர்களும் டிரெண்டிங் லிஸ்டில் வந்துவிடுவார்கள்.இப்படித்தான் தற்போது தன்னுடைய பணிவான குணத்தின் மூலம் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறார் ஆலப்புழா ஐஏஎஸ் அதிகாரி கிருஷ்ண தேஜா..என்ன செய்தார்? ஏன் இணையத்தில் வைரலாகிறார் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்றாலே தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு பணிகளுக்காகக் கலெக்டரை சந்திப்பது வழக்கம். ஒரு சிலர் தங்களுடைய பார்க்க வரக்கூடிய அனைவரிடமும் மரியாதையாக பேசுவார்கள். இப்படித் தான் ஆலப்புழா ஆட்சியர் அலுவலகத்திற்கு வயதான பெண்மணி ஒருவர், சில தேவைகளுக்காக கலெக்டரை சந்திக்க வந்துள்ளார். பேசி முடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்லும் போது நாற்காலியில் அமர்ந்திருந்த ஐஏஎஸ் அதிகாரி கிருஷ்ணா தேஜாவிற்கு தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்துள்ளார். அப்போது அதிகாரியும் தலை குனிந்து மரியாதைப் பெற்றுக்கொள்கிறார்.

  இந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஐஏஎஸ் அதிகாரி கிருஷ்ணா தேஜா, “ இதை விட வேறு என்ன வேண்டும் என்றும் #IAmForAlleppey எனவும் பதிவிட்டுள்ளார். இதைப் பதிவிட்ட ஒரு நாளிலே சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகளையும், பல கமெண்ட்ஸ்களையும் பெற்றுள்ளது. குறிப்பாக “டிவிட்டர் யூசர் ஒருவர், உங்கள் பணிவு தான் உங்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளது என்றும், பெரியவர்களின் ஆசிர்வாதத்தை விட உலகத்தில் சிறந்தது வேறு ஒன்றும் இல்லை என்றும் பதிவிட்டுள்ளார்.

  நடுவுல கொஞ்சம் ஆடியை காணோம்... மழலை குரலில் தமிழ் மாதங்களை சொல்லி அசத்திய சிறுமி... கியூட் வீடியோ

   மற்றொரு டிவிட்டர் யூசர்ர் ஒருவர், பெரியவர்களின் ஆசிர்வாதம் உங்களை நல்ல நினைக்குக் கொண்டு செல்லும் என்றும், நீங்கள் எந்த அளவிற்கு உயர்ந்த இடத்தை அடைந்தாலும் இந்த பணிவை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதீர்கள் என பதிவிட்டுள்ளனர். மேலும் உங்களின் பணிவிற்கு வாழ்த்துக்கள் என்றும், நீங்கள் வாழ்க்கையில் உயரத்தை அடைய பிராதிக்கிறோம்“ என்பது போன்ற கருத்துக்களை டிவிட் செய்து வருகின்றனர்.

  ஜம்மு காஷ்மீரில் இ - ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் முதல் பெண் - குவியும் பாராட்டு

   இதோடு மட்டுமின்றி டிவிட்டர் யூசர்கள், பாராட்டுக்களைத் தெரிவிப்பது போன்ற பல இதய ஈமோஜிகளையும் டிவிட் செய்துள்ளனர். என்ன தான் ஆளுமைப் பண்புக்கு வந்துவிட்டாலும், தன்னிடம் உள்ள பணிவையும், மரியாதையும் தக்கவைத்துக் கொண்டால் எப்போதும் ஏதாவது ஒரு வழியில் உலகின் பார்வைக்குத் தெரியவருவோம் என்பதை நிரூபித்துள்ளார் ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணா தேஜா….

  Published by:Srilekha A
  First published:

  Tags: Trending, Trending News