ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கெத்தா சேலை அணிந்து கபடி விளையாடும் பெண்கள் - வைரலாகும் ட்விட்டர் வீடியோ!

கெத்தா சேலை அணிந்து கபடி விளையாடும் பெண்கள் - வைரலாகும் ட்விட்டர் வீடியோ!

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

எந்த ஆடை அணிந்திருந்தாலும் விளையாட்டில் ஆர்வம் இருந்தால் போதும் சும்மா புகுந்து விளையாடலாம் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர் சத்தீஷ்கர் மாநில பெண்கள்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சத்தீஸ்கர் மாநிலத்தில்  சேலை அணிந்து கொண்டு பெண்கள் கபடி விளையாடும் வீடியோ காட்சி ஒன்றை ஐஏஎஸ் அதிகாரி அவினாஷ் டிவிட்டரில் பதிவிட்டதையடுத்து இணையத்தில் காட்டுத்தீ போல வைரலாகிறது.

  பெண்கள் என்றால் எதற்கும் சலைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பல நிகழ்வுகள் அரங்கேறிவருவதை நாம் பார்த்திருப்போம். அதே போன்று தான் சமீபத்தில் சத்தீஸ்கர் மாநில பெண்கள் விளையாடிய கபடி போட்டிகள் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பெண்கள் கபடி விளையாடுவது என்ன புதிதா? என்ற எண்ணம் தோன்றலாம். ஆம் பொதுவாக எந்தவொரு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டாலும் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அனைவரும் அதற்கேற்ற ஆடைகள் உடுத்திக் களம் காண்பார்கள்.

  அப்போது தான் எவ்வித இடையூறு இல்லாமல் விளையாட முடியும் என்பார்கள். ஆனால் இதனையெல்லாம் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எந்த ஆடை அணிந்திருந்தாலும் விளையாட்டில் ஆர்வம் இருந்தால் போதும் சும்மா புகுந்து விளையாடலாம் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர் சத்தீஷ்கர் மாநில பெண்கள். அப்படி என்ன நடந்தது? என நாமும் தெரிந்து கொள்வோம்.

  சத்தீஷ்கர் மாநிலத்தில் சத்தீஷ்கர் ஒலிம்பிக்ஸ் என்ற போட்டித்தொடரை அம்மாநில முதல் அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். அக்டோபர் 6ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி வரை சுமார் 14 பாராம்பரிய விளையாட்டுகள் நடத்தப்படவுள்ளது. உள்ளூர் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும் விதமாக தொடங்கப்பட்ட இந்த விழாவில் ஆண்கள், பெண்கள் என தனித்தனிப் பிரிவுகளாக அனைத்து வயதினருக்கும் இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் தான் பெண்கள் சேலை அணிந்து கபடி விளையாடியுள்ளனர்.

  உடல் வலிமையைக் காட்ட வேண்டிய போட்டிகளில் பெண்கள் அசத்த முடியும் என்பதை இந்த வீடியோ தெரிவித்துள்ளது. இவ்வாறு சேலை அணிந்து கெத்தாக பெண்கள் விளையாடும் கபடி போட்டிகள் குறித்த வீடியோவை, ஐஏஎஸ் அதிகாரி அவினாஷ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். சுமார் 51 நொடிகள் வீடியோ தான் என்றாலும் வீட்டில் உள்ள பெண்களும் போட்டி என்று வந்துவிட்டால் சிங்கம் தான் என்பது போன்ற கருத்துக்களோடு வைரலாகிறது. மேலும் உங்களின் விளையாட்டு அற்புதமாக உள்ளது என்றும், இதுபோன்ற விளையாட்டுகளில் தொடர்ந்து பங்கேற்று சாதித்துக் காட்டுங்கள் என்பது போன்ற கருத்துக்களையும் நெட்டிசன்கள் ட்விட் செய்து வருகின்றனர்.

  Also Read : உடலை வில்லாய் வளைத்து உலக சாதனை படைத்த சிறுமி.. வைரல் வீடியோ

  இதோடு பெண்கள் இப்படியெல்லாம் விளையாடலாமா? என்ற கேள்வியை யாரும் முன்வைக்காமல், இரு பெண்கள் அணிகளுக்கு இடையே நடைபெறும் மோதல் போட்டிகளைப் பார்த்த இக்கிராமத்தினர், சிறுவர்கள், பெரியவர்கள், இளைஞர்கள் என அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் ஐஏஸ்எஸ் அதிகாரி வெளியிட்டுள்ள வீடியோ வெறும் ட்விட்டர் பதிவாக மட்டுமில்லாது, மற்ற பெண்களுக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending Video, Viral Video